Monday, March 15, 2021

எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 6
அதென்னமோ அமானுஷ்யம் என்றாலே அது கே.பி மன்னர் கூட்டணிதான் போல என்னுடைய முகனூல் நண்பர் ஒருவர் பாடல் காட்சியை படமாக்குவதில் ஸ்ரீதர் மற்றும் பாரதிராஜா என்று சொல்லியிருந்தார் ஸ்ரீதர் சரி பாரதிராஜா (வெள்ளை தேவதைகள் என்ற பெயரில் பல பாடல்களை ........... சொல்லவும் வேண்டுமோ) ஸ்ரீதரைவிட இன்னும் சிறப்பாக பாடல் காட்சியை படமாக்குபவர் கே.பி. ஒருவரே அவருக்கு அடுத்து ஸ்ரீதர், ஏ.சி.டி, சி.வி.ராஜேந்திரன், பந்துலு, பி.மாதவன் என எல்லோரும் உண்டு இந்த முறையும் அமானுஷ்யம் கே.பி - மெல்லிசை மாமன்னர் கூட்டணிதான் திரைப்படங்களில் சொல்லாமல் போன காதல் அது குறித்து காட்சிகள் என பல இயக்குனர்களும் காட்சியமைத்துள்ளார்கள் இருந்தாலும் எங்கள் கே.பி ஒரு படி மேல் .. ஜீனியஸ் அப்படி ஒரு காட்சியை வைக்கிறார். பாடல் எப்படி இருக்க வேண்டும். சொல்ல நினைத்து சொல்லாமல் போகும் போது ஒரு வித FREEZE நிலை என்பார்களே அதுபோல ஆசை இருக்கும் ஆனால் சொல்ல கூச்சம் பயம் சிலருக்கு பயம் எதனால்.. சொன்னால் ஒரு வேளை அந்த காதலை அவனோ அவளோ மறுத்துவிடுவார்களோ என்ற அச்சம் இங்கும் அப்படித்தான் .. அவளுக்கு அவன் மீது காதல் ஆனால் அவனுக்கோ இன்னொருத்தி மீது காதல் .. இது பல படங்களில் பார்த்தது தானே என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது.. பாலச்சந்தருக்கும் கேட்டிருக்கும் என நினைக்கிறேன் அதனால்தான் இப்படி காட்சியமைக்கிறார் அவன் தானும் சொல்லாமல் அவள் சொல்லட்டும் என்று இருக்கிறான்.. அந்த உணர்வில் அவளது ஓவியத்திடம் பேசுகிறான் “நீயாக வந்து சொல்லாதவரை உனக்கு விடுதலை இல்லை என சொல்லி நானும் சொல்ல முடியாமல் இருக்கிறேன்” என்ற அந்த நொடியில் பாடல் ஆரம்பம். பாடல் என்ன படம் என்ன என்று தெரிந்திருக்குமே .. ஆம் சொல்லத்தான் நினைக்கிறேன் திரைப்படத்தில் சொல்லத்தான் நினைக்கிறேன் பாடல் கே.பி என்ற வைரம் வழங்கிய மற்றுமொரு கொடை “சொல்லத்தான் நினைக்கிறேன்” 3 பெண்கள் ஒருவரை காதலிக்க ஆஹா அவனல்லவோ அதிர்ஷ்டம் செய்தவன் என்று நினைக்கையில் அவன் ஆகிறான் இலவு காத்த கிளியாக சிவகுமார், ஜெய்சித்ர,எஸ்.வி.சுப்பைய்யா,ஸ்ரீவித்யா, சுபா , ஏ.வீரப்பன் என எல்லோரும் நன்றாய் நடித்திருந்த படம். படத்திற்கு பலம் மெல்லிசை மாமன்னர் .. இசை , பாடல்கள் எல்லாமே அருமை. இது தான் கே.பி -எம்.எஸ்.வி கூட்டணியில் வாலியின் முதல் படம் படத்தின் ஹைலைட் பாடல் என்றால் அது இதுதான் மாமன்னர் அமானுஷ்யம் என நிரூபித்த பாடல் இது அதுவும் அவர் குரலிலேயே கேட்டால் அந்த உணர்வு இரட்டிப்பாய் ஒலிக்காதோ அப்படி அவர் ஆரம்பிக்கிறார்.. சொல்லமுடியாமல் தவிக்கும் நிலை என்பதால் பாடல் மிகவும் மெதுவாக அமைத்திருப்பார் .. ஜெய்சித்ராவை நினைத்து நாயகன் பாடலை துவங்குவான் வாலி காற்றில் மிதக்கும் என்ற வரி போட்டதாலோ என்னவோ காற்றில் மிதக்கும் உணர்வை இசையில் கொடுப்பார் மன்னர் சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன் பாலச்சந்தர் மிக அழகாய் படமாக்கியிருப்பார். மெதுவாக ஜெய்சித்ரா பூங்கொத்துடன் மிதந்து வருவது போல் வருவார். பூங்கொத்தை குடுவையில் வைத்துவிட்டு இருவரும் மெதுவாய் மாடிப்படி இறங்குவர்.. அதற்கான இசை .. அழகோ அழகு. இது சொல்ல முடியாமல் தவிக்கும் நாயகனின் நிலை.. அங்கே இன்னொருவள் தன் மனதில் உள்ளதை சொல்ல முடியாமல் தவிக்கிறாள். ஆம் ஸ்ரீவித்யா பாடுவதாய் தொடரும் பாடல் ஊதுபத்தி புகை, தனிமையில் இருக்கும் பெண் ஓவியம் என பாலச்சந்தர் ஸ்ரீவித்யாவின் மன எண்ணங்களை வெளிப்படுத்தியிருப்பார் (ஜானகியின் குரலில்) தன் மன வீட்டில் அவன் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ என்று ஒருவித சந்தேகத்துடன் கேட்டு பின் அவளே முடிக்கிறாள் இப்படி புகுந்தானே எங்கும் நிறைந்தானே (இந்த வரியில் அவளை அறியாமல் அவள் வெளிப்படுத்தும் புன்னகை ) காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே மன வீடு அவன் தனி வீடு அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் இப்பொழுது ஸ்ரீவித்யா மெதுவாய்( மிதப்பது போல் ஓடி வர) அங்கே சிவகுமார் மாடிப்படிகளில் இறங்கி வர ... அற்புத காட்சியமைப்பு இடையிசையில் வயலின் ஜாலம் .......... அப்பப்பா .. வாய் சொல்லாத உணர்வை இசை சொல்லும் நாயகன் குளிக்கும் போது கூட அந்த எழில் மங்கையின் நினைவு .. காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம் நீராட்ட நான் பாராட்ட அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ அவள் வருவாளே சுகம் தருவாளே ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன் அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ என்று சந்தேகம் இருந்தாலும் அவள் நடவடிக்கை எல்லாம் தன் மேல் காதல் உள்ளதை சொல்கிறது என்ற அந்த நம்பிக்கையில் வருவாள் சுகம் தருவாள் என்று சொல்லி பாடுவான் .. பாலசந்தர் 3 சிவகுமார் படங்கள் சுழல்வது, சிவகுமாருக்கு இருபுறமும் 2 நாயகிகள் பின் மூவரும் ஒரு சாய்வு நார்காலியை நோக்கி ஓடிவர கடைசியில் ஜெய்சித்ரா அமர்வதாக அழகாக காட்சிபடுத்தியிருப்பார் இப்பொழுது சுபா பாடுவதாய் .. ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ அவன் அணைப்பானே என்னை நினைப்பானே ஆ ஹா சுபா ஆ ஹா என முடிக்க விசில் வரும் பாருங்கள் அது தான் மெல்லிசை மாமன்னர். விசிலில் பல்லவி பின் வயலின் இசை என மிரட்டியிருப்பார் முடிவுரை என்பது அவன் எழுதுவதாய் அமைத்திருப்பார் கே,பி. அவன் தன் நெஞ்சில் உள்ளதை பாடி முடிக்கிறான் இதில் அவன் நினைவுகளில் அவள் ஊஞ்சல் ஆடுவது போல் skipping ஆடுவதாய் காட்சி அமைத்த கே.பி ஒரு ஜீனியஸ் நேரில் நின்றாள் ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள் காவியமாய் (அவன் தன் நெஞ்சில் நின்றவளை ஓவியமாய் வடித்திருப்பான்) நேரில் நின்றாள் ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள் காவியமாய் நான் பாதி அவள் தான் பாதி என கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே இறுதியாக அவன் சொல்லத்தான் நினைக்கிறேன் என்று பாட , உள்ளத்தால் துடிக்கிறேன் (இரண்டு பெண்களும் நினைப்பதாய்) சிவகுமார் நடுவில் .. ஒரு பக்கம் ஸ்ரீவித்யாவின் முகம் இன்னொரு பக்கம் சுபாவின் முகம்.. என பாடல் முடியும் .. ஆஹா சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆஹா இந்த பாடல் சொல்ல நினைத்து சொல்லாமல் போகும் உணர்வை அப்படியே வெளிப்படுத்தும் பாடல் வாலியின் மிகச்சிறந்த வரிகளை மெல்லிசை மன்னரும் ஜானகியும் அழகாய் பாடியிருப்பார்கள், அதுவும் மெல்லிசை மன்னரி குரலில் ஒலிக்கும் “சொல்லத்தான் நினைக்கிறேன்” சொல்ல முடியாத அளவிற்கு ஆஹா ஓஹோ . ஸ்ரீவித்யாவின் பிறந்த நாளில் அவரது பாடலை பதிவிடும்படி ஆனது கூட அவருக்கு ரசிகனின் சமர்ப்பணம்.. ஏக்கமும் ஒரு வித அச்சமும் கலந்த ஒரு நிலையை இந்த பாடலைவிட அழகாய் எந்த பாடலும் சொல்ல முடியாது. வாலி கே.பி மெல்லிசை மாமன்னர் .. அமானுஷ்யம் ............ அமானுஷ்யம் தொடரும்- ராஜேஷ் லாவண்யா

No comments:

Post a Comment