Tuesday, January 11, 2022

மறக்க முடியாத ஆண் முகங்கள்-2

விசாலி்யம்மா கூறியது போல் முந்தைய பதிவில் நான் குறிப்பிட மறந்த சில முகங்கள் உண்டு. மன்னிக்கவும். இதோ இந்த பதிவில் அவர்களை பற்றியும் பார்ப்போம். டெல்லி கணேஷ் சார், இதிலும் உங்கள் புகைப்படம் இல்லை மன்னிக்கவும். சொன்னது போல் உங்களை பற்றி முழு கட்டுரை எழுதுவேன் விரைவில் முந்தைய பதிவில் நான் குறிப்பிட மறந்த சில முகங்கள் இதோ
பூவிலங்கு மோகன். திரைப்படத்தில் அறிமுகமானாலும் தொலைக்காட்சியில் தான் இவர் ஜொலிக்க முடிந்தது. பாலச்சந்தர் தொடர்களிலும் பல தொடர்களிலும் பல்வேறு பாத்திரங்களில் மின்னியவர் இவர். சாய்ராம். விசாலிம்மா சொன்னது போல் அடேயப்பா வில்லன்,அப்பாவி அப்பா என எந்த வேடம் கொடுத்தாலும் அதை 100% செய்பவர் இவர். வாழ்ந்து காட்டுகிறேன் தொடரில் ராஜாக்கிளி வேடத்தில் அற்புதமாக ஜொலித்தவர். பரத் கல்யாண் கல்யாண் குமாரின் மகன். பாந்தமான வேடமென்றால் இவர் தான். எத்தனை எத்தனை தொடர்கள் எத்தனை எத்தனை வேடங்கள். ஒரு அப்பாவி இளைஞன் என்றால் இவர் முகம் நினைவு வருவது உண்மை. விஜய் சாரதி. சசிகுமாரின் மகன். அழகாக தமிழ் உச்சரிப்பவர். நீங்கள் கேட்ட பாடல் மூலம் பிரபலமானவர். பல தொடர்களில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியவர். மின்பிம்பங்கள் தயாரித்த பல குறுந்தொடர்களில் பிரமாதமாக நடித்தவர். இவரை இன்னும் நன்றாக பயன் படுத்திக்கொண்டிருக்கலாம் என்பது என் கருத்து. ரவிராகவேந்தர் லதா ரஜினிகாந்தின் தம்பி. தூர்தர்ஷன் தொடங்கி இன்றும் பல தொடர்களில் கொடுத்த வேடத்தை அற்புதமாக அளவாக நடிப்பவர். இன்னும் சொல்லப்போனால் இவர் நடிக்காத வேடமில்லை என்றே கூறலாம். முன்பு தூர்த்ர்ஷனில் ஒரு தொலைபேசி மூலம் காதல் நாடகத்தில் இவரது நடிப்பு பிரமாதம் கவிதாலயா கிருஷ்ணன் இவரும் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர். டிரைவர் முதல் மூத்த அண்ணன் பாத்திரம் வரை எது கொடுத்தாலும் அழகாக செய்பவர். கையளவு மனசு தொடரில் ரேணுகாவின் கணவராக அருமையாக நடித்திருப்பார். மோகன் ராம். இவரைப்பற்றி சொல்ல வேண்டியது இல்லை. சின்னதிரை வெள்ளித்திரை என எந்த திரையிலும் மின்னுபவர். பாத்திரம் எதுவாக இருந்தாலும் இவரது முத்திரையை பதிப்பவர். இரண்டாம் சாணக்கியனில் இவரது வேடம் அருமை அருமை. பாம்பே ஞானத்துடன் இவர் உரையாடும் காட்சிகள் அருமை. சுபலேகா சுதாகர். பல தொடர்களிலும் அளவான நடிப்பை வழங்குபவர் இவர். அண்ணி தொடரில் இவரது வேடம் அருமை. மருமகளுடன் இவர் மோதும் நடிப்பு அபாரம். சுரேஷ்வர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று எந்த வேடம் கொடுத்தாலும் அருமையாக நடிப்பவர் என்று பெயர் எடுத்தவர். சஹானா போன்ற தொடர்களில் இவரது நடிப்பு அருமை. அதே போல் எதுவும் நடக்கும் தொடரில் அந்த மலைசாதி வேடம் அருமை. மேலும் வளர வாழ்த்துக்கள் அப்சர். இவரும் பளிச்சென்ற அறிமுகம். துடுக்கான வேடங்கள் என மின்னுபவர். அலைகளில் இவரது நடிப்பு அருமை. வேடம் எதுவாக இருந்தாலும் அழகாக செய்பவர் இவர். வாழ்த்துக்கள் பிரேம்: அண்ணியில் அருமையான வேடமேற்றவர் இவர். நல்ல நல்ல கதாப்பாத்திரங்கள் செய்தவர். இன்று திரைப்படங்களிலும் நல்ல பெயர் பெற்றுள்ளார் தீபக். அண்ணியில் அச்சசோவின் கணவராக அழகாகவும் அருமையாகவும் நடித்தவர். பல தொடர்களில் தன் பாத்திரத்தை அழகாக செய்யக்கூடியவர் ராம்ஜி ரமணி Vs ரமணி தொடரில் அந்த ரமணி பாத்திரத்தை இவரை விட யாரும் அவ்வளவு அழகாக செய்ய யாருமில்லை. மர்மதேசம் தொடரில் ஆக்ரோஷமான அண்ணனாக இவரது நடிப்பு அபாரம். இன்னும் பல தொடர்களில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவரையும் தொலைக்காட்சி சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. கோல்டன் சுரேஷ் இவரும் பல தொடர்களில் கடைக்குட்டியாக, நல்ல நல்ல கதாப்பத்திரங்களில் நடித்தவர். மேலும் வளர வாழ்த்துக்கள் சாரகேஷ்- அருமையான நடிகர். ஆனால் தற்கொலை செய்து கொண்டு விட்டர். பாவம் நல்ல திறமையான நடிகர் இவர்கள் எல்லோருமே மறக்க முடியா முகங்கள் இனி மறக்க முடியாத பெண் முகங்களுடன் விரைவில்-ராஜேஷ்(Rajesh Venkatasubramanian)

மறக்க முடியாத சின்னத்திரை பெண் நடிகைகள்

மறக்க முடியாத ஆண் முகங்களை தொடர்ந்து மறக்க முடியாத பெண்களை பார்ப்போம். எத்தனையோ பெண் நடிகைகள் தொலைக்காட்சியில் தோன்றினாலும் சிலர் தங்களின் சிறப்பான நடிப்பால் நம்மை கவரத்தான் செய்துள்ளனர். இதோ நம்மை கவர்ந்த சிலர்
ராணி சோமனாதன். மிகச்சிறந்த நடிகை. திரைப்படங்களில் 70’களிலிருந்து நடித்திருந்தாலும் தொலைக்காட்சியில் தனி முத்திரை பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ருத்ர வீணையில் அந்த வேடத்தில் அசத்தியிருப்பார். நிறைய தொடர்களில் குறும்பாகவும், துடுக்காகவும் பேசி நம்மை அசத்துவார். சில வருடங்களுக்கு முன் இவர் இறந்துவிட்டார். இருந்தாலும் மிகச்சிறந்த நடிகை. எஸ்.ஆர்.சிவகாமி: பழநி படத்திலியே எஸ்.வி.சுப்பைய்யாவின் மனைவியாக நடித்திருப்பார். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் வந்திருந்தாலும் தொலைக்காட்சியில் நல்ல வேடங்களை பாலச்சந்தர் இவருக்கு வழங்கினார். கையளவு மனசு தொடரில் வாலி ஐயாவின் மனைவியாக அருமையாக நடித்திருப்பார். காதல் பகடையில் கூட ரேணுகாவின் அத்தையாக அருமையாக நடித்திருப்பார். மிக்சசிறந்த நடிகை . இவர் மறைந்த செய்தி கூட வெளிவரவில்லை என்பது வருந்ததக்க ஒன்று.. என்ன செய்வது பிரபலமில்லையென்றால் இவ்வுலகம் மறந்தேவிடும். எம்.பானுமதி: பல படங்களில் அற்புதமான வேடங்கள் செய்தவர். ஒரு சீன் வந்தாலும் தில்லானா மோகனாம்பாளில் நம்மை அசத்தியவர். தமிழ் உச்சரிப்பிலும் அசத்துபவர். அருமையான நடனக்கலைஞரும் கூட. எல்லாம் இருந்தும் ஏனோ அடையவேண்டிய புகழ் அடையவில்லை இருந்தாலும் நடிப்பில் என்றுமே நம்மை அசத்தியவர். பாலச்சந்தர் தனது தொடர்களில் அருமையான வேடங்கள் தந்தவர். அண்ணி, ரமணி போன்ற தொடர்களில் அளவான நடிப்பை நமக்கு வழங்கியவர். இவர் மறைந்த் செய்தியும் வெளியே வரவில்லை என்பது வருத்தமான செய்தி.. மறக்க முடியாத முகம். பாம்பே ஞானம். பாலசந்தர் சார் அறிமுகப்படுத்திய பல நடிகர்களில் இவரும் ஒருவர். நாடக அனுபவம் இருந்ததால் தொலைக்காட்சி தொடர்களில் அழகாக பொருந்தினார். பல தொடர்களில் பல வேடங்களில் ஜொலித்தவர் வத்ஸலா ராஜகோபால் துடுக்கான பாட்டி வேடங்களில் நம்மை எப்பவுமே மகிழ்விப்பவர் இவர். பல தொடர்கள் பல வேடங்கள் என எல்லாவற்றிலும் அசத்துபவர் இவர். ரேணுகா: பல துக்கடா வேடங்களை சினிமாவில் செய்திருந்தாலும் தொலைக்காட்சியில் தான் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக்கொண்டவர். பெண்கள் பிரதான வேடங்களில் நடிக்கும் தொடர்களுக்கு முன்னோடி. டி.ஆர்.லதா: தூர்தர்ஷன் முதல் இன்று வரை பல தொடர்களில் நடித்துவருபவர். மென்மையான வேடங்களில் ஜொலிப்பவர் நாஞ்சில் நளினி: இவரும் பல தொடர்களில் அழகான வேடங்களில் நடித்தவர். அனிதா மேத்யூஸ்: அடேயப்பா இவரைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும், நில் கவனி கிரேசியில் மார்டன் பெண்ணாக வருவதாகட்டும், இரண்டாம் சாணக்யனில் அந்த அன்பான பாந்தமான மாமியாக வருவதாகட்டும், பிரேமியில் வரதராஜனுக்கு மனைவியாக அருமையான வேடம், ஜன்னலில் வாயாடியாக சுகன்யாவின் அம்மாவாகவும் ஜொலித்திருப்பார். ஹாட்ஸ் ஆப்… யுவஸ்ரீ: இவரும் தூர்த்ர்ஷன் முதல் இன்று வரை பல தொடர்களில் பல்வேறு தொடர்களில் பல்வேறு வேடங்களில் ஜொலித்தவ்ர். கொடுத்த வேடத்தை செவ்வனே செய்து முடிப்பவர். நித்யா: நடிப்பு குரல் கொடுப்பது என பலவற்றிலும் ஜொலிப்பவர். இவரும் எந்த வேடம் செய்தாலும் அருமையாக செய்பவர். சுமங்கலி: கிரேசி மோகனின் ஆஸ்தான நாயகி. பல தொடர்களில் நகைச்சுவை பாத்திரங்கள் செய்தவர். இவரையும் அழுவாச்சி வேடங்கள் செய்யவைத்து விட்டது இந்த தொலைக்காட்சி.. என்ன கொடுமை சார் இது மதுரை சோபனா: இவரும் பல தொடர்களில் நல்ல வேடங்கள் செய்தவர். ஷைலஜா: இவரும் பல தொடர்களில் நம்மை அசத்தினார். குறிப்பாக அந்த ருத்ரவீணை தொடரில் அடேயப்பா என்ன நடிப்பு . அந்த பாத்திரமாகவே மாறியிருப்பார் என்றால் மிகையில்லை, இவரது திறமைக்கு இன்னும் பாத்திரங்கள் கிடைக்கவில்லை. கிடைக்க வாழ்த்துவோமாக. மீரா கிருஷ்ணன் பாடகியாக வந்து , செய்திவாசிப்பதுடன் நடிக்கவும் தொடங்கி அதிலும் சிறப்பாக செய்ய முடியும் என நிரூபித்தவர். பாந்தமான அம்மா வேடங்களில் ஜொலிப்பவர் தேவதர்ஷிணி: தொலைக்காட்சியின் ஊர்வசி எனலாம் . எல்லா வேடங்களிலும் ஜொலிப்பவர். எத்த்னை எத்தனை தொடர்கள் எத்தனை வேடங்கள் .. காயத்ரி: மஹாதேவ் முதல் மெட்டி ஒலி வரை அருமையான வேடங்களில் நடித்தவர். மென்மையான வேடமென்றால் காயத்ரி தேவிப்ப்ரியா: சின்னத்திரை வில்லி .. ஆம் அப்படிப்பட்ட வேடங்கள் செய்வதில் வல்லவர். நல்ல குரல்வளம் கொண்டவர். இவர்களை தவிர இன்னும் சிலரும் உள்ளனர். அடுத்த பகுதியில். (Rajesh Venkatasubramanian)

பாலச்சந்தர் -பாகம் 10 எதிரொலி

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் -பாகம் 10 10. எதிரொலி
எதிரொலி என்றால் என்ன நமது குரல் நமக்கே கேட்பது இன்னும் பெரிதாக கேட்பது .. அது தான் இந்த கதையின் சாராம்சம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் முதன் முதலாக பாலச்சந்தருடன் நடிகர் திலகம் இணைந்த படம் இது. ஆனால் இதுவே அவர்கள் பணி செய்த கடைசி படமும் கூட. இரு மேதைகள் இணைந்தால் ஒன்று பலன் இருமடங்காகும் இல்லையென்றால் முயற்ச்சி வீணாகும்.. இதில் எது நடந்தது என்று தெரியவில்லை . சங்கர் ஒரு பெரிய வக்கீல். ஏழை எளியவருக்காக வாதாடும் வக்கீல். சிலருக்கு பண உதவியும் செய்பவர். இப்படி இருக்க ஒரு முறை கோர்ட்டில் கட்ட வேண்டிய பணத்தை பறிகொடுக்க அதை புரட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட கதையில் சூடு பிடிக்கிறது. எந்த 10 கட்டளைகள் இவரின் வாழ்க்கையை முறையாக செல்ல பயன்படுத்தப்பட்டதோ அதே கட்டளைகளை மீறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அதோடு சேர்த்து கொலைப்பழியும் கூட .. அதிலும் மேஜர் இவரை அடிக்கடி மிரட்டுவதும் இவர் மிரளுவதும் தூள் படம் பாலச்சந்தரின் படமும் ஆகாமல் நடிகர் திலகத்தின் படமாகவும் இல்லாமல் ஒரு வித திரிசங்கு சொர்க்கத்தில் மாட்டிக்கொண்ட கதை.. ஆம் கொஞ்சம் இழுவை .. தேவையில்லாத காட்சிகள் ..என படம் கொஞ்சம் சொதப்பலாகிவிட்டது.. திரையிசைத்திலகம் வாலி என்றாலும் பாடல்கள் எல்லாமே சுமார் ரகம். ஆனாலும் நமக்கு நடிப்புக்கு பஞ்சமில்லை. நடிகர் திலகமும் சரி விஜயாவும் சரி அருமையாக நடித்திருப்பார்கள். குறிப்பாக விஜ்யா ஒவ்வொரு முறையும் நடிகர் திலகம் தப்பு செய்ய நினைக்கும் போதும் சரி விஜயாவின் அந்த பயமும் சரி நன்றாக செய்திருப்பார். ரோஜா ரமணி வழக்கம் போல் ஓகே ரகம். நாகேஷ் – ஜி.சகுந்தலா நகைச்சுவை சிரிக்க வைக்காத ஒன்று. தங்கை லெக்ஷ்மி சிவகுமார் காதல் ஓகே ரகம். ஏற்கனவே படங்களில் பார்த்த ஒன்று. இன்றும் இது கே.பியின் படமா நடிகர் திலகத்தின் படமா என்ற குழப்பம் உண்டு. ஒரு வேளை படம் வெற்றி பெற்றிருந்தால் இவர்கள் இருவரது கூட்டணி நிலைத்திருக்குமோ என்னவோ.. பாலச்சந்தரின் முத்திரை அங்கங்கே உண்டு. நடிகர் திலகத்தின் நடிப்பு நிறைய உண்டு. அடுத்த படத்துடன் விரைவில் ராஜேஷ் (Rajesh Venkatasubramanian)

பாலச்சந்தர்-9 இரு கோடுகள்

9. இரு கோடுகள் FILE of a LIFE
கே.பியின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்றால் அது இரு கோடுகள். கலாகேந்திராவின் தயாரிப்பில் ஜெமினி,செளகார் ஜானகி,ஜெயந்தி,வி.எஸ்.ராகவன், சகஸ்ரநாமம், எஸ்.என்.லெட்சுமி, நாகேஷ், சச்சு மற்றும் மாஸ்டர் பிரபாகர் நடித்திருந்தனர். கோபினாத் என்ற ஜெமினி தான் காசியில் தங்கியிருந்த வீட்டின் எஜமானரின் பெண்ணான செளகாரை காதலித்து கல்யாணம் செய்துகொள்கிறார். திடீரென்று உடம்பு சரியில்லாமல் போன ஜெமினியை பார்க்க வரும் அவரது பெற்றோர்கள் அவரை கையோடு சென்னைக்கு கூட்டிப்போக திரும்பி வருவார் என காத்திருக்கும் செளகாருக்கோ ஏமாற்றம். அதே சமயம் அவர் குழந்தைக்கு தாயாகப்போகும் செய்தியைக்கேட்டு கோபம் கொள்ளும் தந்தை வி.எஸ்.ராகவனை அத்தை எஸ்.என்.லெட்சுமி தேற்றுகிறார். பெண்ணை நன்கு படிக்கவைத்து கலெக்டராக்குவதாக தந்தை சபதம் செய்கிறார். இதற்கிடையே ஜெமினிக்கு வீட்டில் பெண்பார்த்து கல்யாண்மும் முடிந்துவிட தனக்கு செளகாருடன் கல்யாணம் முடிந்ததை மறைத்து ஜெயந்தியுடன் திருமணம்செய்து 3 குழந்தைகளுடன் இனிதே வாழ்க்கை நடத்துகிறார். வாழ்கையில் புயல் இல்லாமல் எப்படி .. கவர்மெண்ட் உத்தியோகத்தில் அதாவது கலெக்டர் அலுவலகத்தில் கிளார்க்காக இருக்கும் இடத்திற்கு புதிய கலெக்டராக செளகாரே வர அமைதியாக இருந்த ஜெமினியின் வாழ்கையில் புயல் வீச தொடங்குகிறது. இத்தனை வருடங்களாக யாரைப்பார்க்க தவம் கிடந்தாளோ அவனைப்பார்த்து சந்தோஷம் அடைந்தாலும் வேலை இடத்தில் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாள். தனியாக அவனைக்கூப்பிட்டு அவன் காலில் விழுந்து தன் கதையை சொல்ல அவன் பங்குக்கு அவனும் தன் நிலையை கூறுகிறான்.. இப்படியாக தனக்கு ஒரு மகன் இருப்பது தெரியவர அவனைப்பார்க்க திருடன் போல் கலெக்டரின் வீட்டுக்கு வர வி.எஸ்.ராகவனுடன் சந்திப்பு ஏற்பட ஏற்கனவே கொதிப்பில் இருக்கும் ராகவன் தன் மகளிடமே சம்பளம் வாங்கும் வேலையில் உள்ள ஜெமினியை குத்திக்காட்ட இன்னும் அவனை பழி வாங்க அலுவலகத்தில் உள்ள ஆட்களை கையில் போட்டுக்கொண்டு ஜெமினிக்கு திருட்டுப்பட்டம் கட்டுகிறார். அடிக்கடி ஜெமினியும் செளகாரும் சந்தித்தால் அலுவலகத்தில் புகை கிளம்பத்தானே செய்யும். அப்படித்தான் நாகேஷும் வதந்தியை கிளப்பிவிடுகிறார். வீட்டிலும் புகைச்சல் ஆரம்பம். இரு பெண்களும் சந்தித்து கொள்கிறார்கள் . ஒரு சமயம் அலுவலக மியூசிகல் சேர் போட்டியில், இன்னொரு சமயம் செளகார் தன் வீட்டு கொலுவிற்கு ஜெயந்தியை அழக்க வரும்போது .. இப்படி பல திருப்பங்களுடன் கதை முடிவடைகிற்து. செளகார் வெளி நாடு செல்வது போல் படம் முடியும். கதை என்னமோ இரண்டு மனைவி கதை ஆனால் அதை பாலச்சந்தர் சொன்ன விதம் கையாண்ட சூழல்கள் .. பளிச் பளிச் என வசனங்கள் அதுவும் அந்த லைப் பைல் வார்த்தை விளையாட்டு. அப்பாவி கணவனாக ஜெமினி கன கச்சிதம், கலெக்டராக செளகார் மிக பொருத்தம். பாசமும் கருணையும் அப்பாவித்தனத்துடன் ஜெயந்தி.. மிகவும் அருமையான பாத்திரம் அவருடையது. கோபக்கார அப்பாவாக வி.எஸ்.ராகவன், பாசமிகு அப்பாவாக சகஸ்ரநாமம் .. இருவருமே நல்ல நடிகர்கள் . இசை ஆஸ்தான வி.குமார் – வாலி கூட்டணி. எல்லா பாடல்களுமே அருமை அருமை. அலுவலக விழாப்பாடலான நானொரு குமாஸ்தா நவராத்திரி பாடலான புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் .. இதைப்பற்றி வாலி ஐயாவின் நினைவலகள் பகுதியில் விரிவாக எழுதுவேன். பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே . மூன்று பாடல்களும் பிரமாதம். மூன்று முக்கிய பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டத்தையும் கண் முன் கொண்டு வந்திருப்பார். வாழ்கையில் சிறிய கோட்டிற்கு பக்கத்தில் பெரிய கோடு போட்டால் என்ன ஆகும் அது மாதிரி வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதை சொல்லியிருப்பார். இதை கன்னடத்தில் அவரே இரடு ரேககளு, ஹிந்தியில் சஞ்சோக், தெலுங்கில் கலெக்டர் ஜானகி என எல்லா மொழியிலும் இந்த படம் வந்தது. இதில் ஒரே ஒரு நெருடல் பாரதி வேடமெல்லாம் போட்டு வெளுத்து வாங்கும் நாகேஷ் நிஜத்தில் வம்பு பேசுவதும், பையனை கூடையில் வைத்து அலுவலகத்து வருவதும் என சொல்வது கொஞ்சம் நெருடல் மொத்தத்தில் இரு கோடுகள் பாலச்சந்த்ரின் மற்றொரு அருமையான படைப்பு. அடுத்த படத்துடன் விரைவில்-ராஜேஷ்(@rajesh venkatasubramanian)

பாலசந்தர்- பகுதி 2

பாலசந்தர்- பகுதி 2 பாலசந்தர் ஏறிய வெற்றி ஏணி
முதல் படம் வெற்றிய்டைந்த காரணத்தால் பாலசந்தர் உடனே புகழடைந்து விடவில்லை. (இன்றைய இயக்குனர்கள் ஒரு படத்திலேயே எங்கோ சென்றுவிடுகிறார்கள்) பாலசந்தரின் திறமையை நீர்க்குமிழியில் பார்த்த வேலுமணி(சரவணா பிலிம்ஸ்) தன் அடுத்த படத்தை பாலசந்தர் இயக்க வேண்டினார். பாலசந்தர் ஒப்புக்கொண்டார், தனது நண்பர் வி.குமாரையே இந்த படத்திற்கும் இசையமைப்பாளாராக்கினார் .. நாணல்(1965) படம்: நாணல் .. ஆஹா பெயரிலேயே என்ன ஒரு அழகு .. படமும் அதே போல் அற்புதம். ஒரு நிகழ்வை வைத்தே ஒரு கதையை உருவாக்க ஹாலிவுட் போல் தனக்கும் திறமை உண்டு என நிரூபித்தார் கே.பி. Desperate Hours என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் நாணல். சிறையிலிருந்து தப்பித்து செல்லும் 4 குற்றவாளிகள் ஒரு வீட்டில் புகுந்து அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்ச்சிப்பதும் அதன் விளைவுகளுமே கதை. கதை கேட்பதற்கு ரொம்ப சாதரணமாக இருந்தாலும் அதை திரையில் பார்த்தால் அதன் பயங்கரம் தெரிய வரும். அமைதியே உருவாக இருந்த அந்த வீட்டில் 4 புதியவர்கள் அதுவும் குற்றவாளிகள் இருந்தால் எப்படி இருக்கும் நினைக்கும் போதே நடுக்கம் ஏற்படுகிறதல்லவா அதே தான். கே.விஜயன், அவரது மனைவி செளகார் ஜானகி,தம்பி ஸ்ரீகாந்த், தங்கை கே.ஆர்.விஜயா மற்றும் ஒரு முதியவர் என அளவான குடும்பம். குடும்பத்தலைவர் ஊருக்கு சென்ற பின் .. வானொலியில் அறிவிப்பு ஆம் சிறையிலிருந்து 4 குற்றவாளிகள் தப்பிவிட்டார்கள் என்று .. வீட்டின் அழைப்பு மணி அடிக்க செளகார் திறக்க முதலில் ஒருவன் ... தொலைபேசி சரி செய்பவனாக மீண்டும் அழைப்பு மற்றொருவன் குழாய் சரி செய்பவனாக இப்படியே நால்வரும் வீட்டிற்குள் வருகை .. செளகாரின் முகத்தில் அதிர்ச்சி .. கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் விஜயாவும், ஸ்ரீகாந்தும் செளக்காரின் முக மாற்றத்தை கண்டு வியக்க பின் விவரம் தானக தெரிய வர வீடே மயான அமைதி ஒவ்வொரு வினாடியும் என்ன நடக்கும் என்று ஆர்வத்தை தூண்டும் வகையில் காட்சிகளை நகர்த்தியிருப்பார் பாலசந்தர். வீட்டிற்கு அடிக்கடி வரும் குடும்ப நண்பர் வேடத்தில் நாகேஷ் .. விஜயாவை காதலிக்கும் போலீஸ் அதிகாரியாக முத்துராமன்.. என எல்லா பாத்திர படைப்பும் அளவோடு அழகாக செதுக்கப்பட்டிருக்கும். விஜயன் வீடு திரும்ப அவரை பழிவாங்கும் நோக்கத்தில் வந்திருக்கும் மேஜர் அவரை சுட முயற்ச்சிக்க விஜயன் தலையை குணிய வில்லன்கள் இருவரும் தங்களை சுட்டுக்கொண்டு இறப்பதாக கதை முடியும். மேஜர் - பாலசந்தரின் ஏறக்குறைய அனைத்துப் படங்களில் இவருக்கு இடம் உண்டு.. முதல் படத்தில் எப்படி நாகேஷ் முக்கியமோ இந்த படத்தில் மேஜர் அவ்வளவு முக்கிய பங்கு வகித்திருப்பார்.. அந்த கோபம் கொண்ட கொள்ளையன் வேடத்தில் மேஜர் கன கச்சிதம் அதே சமயம் கன்னியம் தவறாதவரும் கூட . தன் கூட்டாளி ஒருவன் விஜயாவிடம் தகாத முறையில் நடக்க முயல அவனை இவர் சுடும் காட்சி அற்புதம்.. மொத்தத்தில் படத்தில் முதல் மதிப்பெண் பெருபவர் மேஜர்.. ஜானகி - படத்தில் ஆரம்பம் முதல் இந்த நால்வரிடம் மாட்டிக்கொண்டு பாடுபடும் பாத்திரம் இவருக்கு.. பாலசந்தர் இவர் மேல் என்றுமே நம்பிக்கை வைத்திருப்பார் ஏனென்றால் இவர் நம்பிக்கையை பொய்யாக்கியதே இல்லை .. ஸ்ரீகாந்த்..ஸ்ரீதரின் பெருமைக்குரிய அறிமுகம் என்றாலும் பட்டை தீட்டியது பாலசந்தர். பெரிய உத்தியோகத்தில் இருந்த ஸ்ரீகாந்த் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் நாடகத்திலும் பின் சினிமாவிலும் நுழைந்தார். கல்லூரி மாணவன் அல்லவா.. அந்த வயதுக்கே உரிய முருக்கு, ஆத்திரம், ஏதாவது செய்து இந்த நால்வரையும் காவல்துறையிடம் காட்டி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என எல்லாம் ஒரு சேர்ந்த நடிப்பு. நாகேஷ் - வீட்டிற்கு சைக்கிளில் வருவார்.ஓசியில் டிபன் காப்பி சாப்பிட்டு கதை அளந்துவிட்டு செல்வார்.. ஏன் ஒருவரும் ஒழுங்காக பதில் சொல்லவில்லை என்ற சந்தேகத்தை கிளப்பும் முதல் மனிதர் இவர். பின்னர் ஒரு கைதியிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் காட்சி நகைச்சுவை.. கைதிகள் பிடிபட உதவும் காட்சியில் இவரது நடிப்பை பற்றி சொல்லவும் வேண்டுமா? முத்துராமன் - காவல் அதிகாரி வேடம் .. நன்றாக பேசி பழகிய விஜயா ஏன் ஒழுங்காக பேசுவதில்லை என்ற குழப்பமும் சரி, வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டு நடிக்கும் விதமும் சரி.. நிஜமாகவே இவர் நவரசத்திலகம் தானய்யா விஜயா - அளவான வேடம், சிறப்பான நடிப்பு... படத்தில் இன்னொரு பலம் -இசை அதற்கு சொந்தக்காரர் திரு.வி.குமார் ஆம் படத்தின் தொடக்கத்தில் அழகான பாடல் " குயில் கூவி துயில் எழுப்ப" சூலமங்கலம் ராஜலெட்சுமியின் குரலில் அற்புத பாடல் ஆலங்குடி சோமுவின் வரிகளுக்கு குமாரின் இசை அற்புதம் முத்துராமன் -விஜயா காதல் விளையாட்டில் ஒரு அழகான பாடல் .. உவமைக் கவிஞர் சுரதாவின் வரிகள் இன்று கேட்டாலும் திகட்டாத தமிழ் ஆம் விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் - டி.எம்.எஸ் - சுசீலா குரல் ஜாலத்தில் பாடல் இதம் பதம்.. கைதிகள் விஜயாவை ஆடச் சொல்ல கூண்டுக்குள் சிக்கிய கிளியாக அவள் பாடி ஆட சுசீலாவின் குரலில் ஒலிக்கும் என்னதான் பாடுவது எப்படித்தான் ஆடுவது .ஆஹா அருமையான பாடல் அல்லவா இது மொத்தத்தில் இது முழுக்க முழுக்க பாலசந்தர் படம். அவரது இயக்குமும் சரி, கதாப்பாத்திர அமைப்பும் சரி பரவலாக பேசப்பட்டது.. ஆக பாலசந்தர் பிரபலமடைய ஆரம்பித்தார். பாலசந்தர் படம் என மக்கள் கூற ஆரம்பித்தனர் முழு வேகத்தில் படங்களை இயக்க ஆரம்பித்தார் அடுத்த பகுதிக்கு காத்திருங்கள் -ராஜேஷ்

பாலசந்தர் - ஒரு பார்வை-1

இயக்குனர் சிகரம் பாலசந்தர் - ஒரு பார்வை .. பாகம்-1
நான் ஏற்கனவே தமிழ்மன்றத்தில் எழுதியதை கொஞ்சம் மெறுகேற்றி இங்கே கோதை நோட்ஸில் எழுதலாம் என இந்த முயற்சி. பாலசந்தர் - கே.பி என்று சினிமா வட்டாரத்தில் அழைக்கப்படும் பாலசந்தர் 60'களில் பல அமெச்சுர் நாடங்களை நடத்தி வந்தார். ஆங்கில் நாடங்கள் எழுதி அதை மேடையேற்றியுள்ளார் 1930ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில் பிறந்த இவர் இன்று சினிமா உலகின் பிரம்மரிஷி அதுவும் இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் சினிமா விதிமுறைக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது . ஆமாம் வெரும் கமர்ஷியல் படங்களை டைரக்ட் செய்து பெயர் பெற்றவர்களும் உண்டு ஆனால் இவரோ சமுதாய சிந்தனை, பெண் முன்னேற்றம் என எல்லா கால கட்டத்திலும் ஒரு பிரச்சனையை மையமாக கொண்டு படங்கள் எடுத்தார்.. பெரும்பாலும் வெற்றி கண்டார், சில சமயம் தோல்வியும் கண்டார். தோல்வி அவரை துவழவிடவில்லை இன்னும் நல்ல படங்கள் கொடுக்கவேண்டும் என்பதற்கு உந்துதலாக இருந்தது .. இந்த மேதை உருவாக்கிய காவியங்கள் எத்தனை எத்தனை உருவாக்கிய நடிப்பு நட்சத்திரங்கள் எத்தனை எத்தனை எந்த நடிகருக்காகவும் கதை உருவாக்காமல், எந்த பெரிய இசையமைப்பாளரை நம்பாமல், யாரை வைத்தும் தன்னால் படம் எடுக்க முடியும் அதில் வெற்றியும் அடைய முடியும் என்பதை பல நேரத்தில் நிரூபித்தவர் இவர். இவரது காவியங்களையும் , உருவாக்கிய நட்சத்திர பட்டாளத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக அலசுவோம் பாலசந்தர் - ஆமெச்சூர் மேடை நாடகங்கள் நிறைய நடத்திக்கொண்டிருந்தார் அவர். அவரது சதுரங்கம் முதலான நாடகங்களுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. சுந்தரராஜன், நாகேஷ் ஆகியோர், தங்களது வேலையை தவிர பிற நேரங்களில் பாலசந்தரின் நாடகங்களில் நடித்து வந்தனர். அப்பொழுதெல்லாம் திரையுலக பிரமுகர்களும் நாடகத்தில் நடிப்பது வழக்கம் மிகப்பெரிய கலைஞர்கள் நாடங்களை பார்க்க வருவது வழக்கம் அப்படி பாலசந்தரின் நாடகத்தை பார்த்த ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியார் அவரது நாடகமான் சர்வர் சுந்தரத்தை படமாக எடுக்க விரும்பினார். அதற்கு கதை திரைக்கதை அமைத்து கொடுத்தவர் பாலசந்தர் இயக்கியது கிருஷ்ணன் - பஞ்சு ( திரையுலகில் பிரேவிசிக்காத காரணத்தால் மற்றவர்கள் இயக்கினார்கள்) அதே போல் எம்.ஜி.ஆர் நடித்து பி.மாதவன் இயக்கத்தில் வந்த தெய்வத்தாய்(1964) படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதினார் தெய்வத்தாய் பாடல்களை இங்கே கேட்டு மகிழுங்கள் பி.மாதவன் இயக்கத்தில் சிவாஜி- தேவிகா நடித்த நீலவானம் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார்(1965) நீர்க்குமிழி 1966 பாலசந்தர் வாழ்கையில் மறக்க முடியாத ஆண்டு அவரது முதல் படைப்பாக நீர்க்குமிழி வெளிவந்தது. பாலசந்தரின் நாடகங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தவர் திரு.குமார்.இருவரின் நட்பும் வளர்ந்தது அதன் காரணமாக தன் முதல் படத்தில் குமாரையே இசையமைப்பாளராக்கினார் பாலசந்தர். நீர்க்குமிழி (1966) ஒரு ஆஸ்பத்திரியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. அந்த கால கட்டத்தில் இது புதுமையே.. (புதுமையை புகுத்தும் இன்னொருவர் ஸ்ரீதர்) கதையின் நாயகனாக தன் நாடகங்களில் நடித்து வந்த குண்டுராவயே( நாகேஷ்) போட்டார் பாலசந்தர். நாகேஷ் அந்த சேது கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் என்றால் மிகையில்லை சீனியர் டாக்டராக மேஜர் சுந்தர்ராஜன்,அவரது மகளாக செளகார் ஜானகியும் விளையாட்டு வீரராக கோபாலகிருஷணனும் நர்ஸாக ஜெயந்தியும் நடித்தனர். படம் நன்றாக ஒடியது.. பாலசந்தர் என்ற அந்த மனிதர் வெள்ளித்திரையில் மின்ன ஆரம்பித்தார் கதையும் சரி, கதாபாத்திர படைப்பும் பாலசந்தரின் தனிச்சிறப்பு.. ஆஸ்பத்திரியை காட்டும் போதும் சரி, மேலை நாடுகளில் என்னென்ன கருவிகள் இருக்குமோ அதைப்போல் காட்டியிருப்பார். படத்தில் மொத்தம் 3 பாடல்கள் ஆடி அடங்கும் வாழ்க்கையடா - சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் கன்னி நதி ஓரம் - பி.பீ.ஸ்ரீனிவாஸ்- சுசீலா குரல்களில் இனிமையான பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் ஆலங்குடி சோமு நீரில் நீந்திடும் மீனினமே சுசீலாவின் குரலில் சொக்க வைக்கும் பாடல் (வரிகள்:சோமு) பாடல்களை இங்கே கேளுங்கள் ஆக பாலசந்தரின் முதல் திரைக்குழந்தை பிறந்த கதை இதுதான் மள மள என அவர் ஏறிய ஏணி - அடுத்த பகுதியில் தொடரும் - ராஜேஷ்

எதிர் நீச்சல்-பாலச்சந்தர் ஒரு பார்வை

7.எதிர் நீச்சல் - வாழ்வில் ஜெயிக்க நிச்சயம் தேவை எதிர் நீச்சல் (1968) கலாகேந்திரா தயாரிப்பில் வந்த முதல் பதிப்பு
மனித உணர்வுகளையும், சமூகத்தையும் மிக அருமையாக பிரதிபலித்த படம் இது. கதையில் வரும் கதாபாத்திரங்கள் நாயகனை எதிர்ப்பவர்கள் அல்லது ஆதரிப்பவர்கள் என்று முன்பே முடிவு செய்யப்படாத கதை.. அதேபோல் வில்லன் என்ற ஒரு பாத்திரம் இங்கு இல்லை ..கதாபாத்திரங்கள் அவர்களுக்குறிய நல்ல குணங்களலால் நல்லவர்களாகவும், தீய குணங்களால் தீயவர்களாகவும் ஆகிறார்கள் அதாவது நல்லவர்/கெட்டவர் என்று முன்பே முத்திரை குத்தாமல் ஒவ்வொரு கதாபாத்திரமும் சூழ்நிலைக்கு ஏற்ப நடக்கவைத்திருக்கும் விதம் பாலசந்தருக்கே உரியது... இந்த கதாப்பாத்திரம் தான் சிறந்தது என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒவ்வொரு பாத்திரமும் அதற்குரிய தனித்தன்மையோடும், அவசியத்தோடும் உருவாக்கப்பட்டிருப்பதும் அழகு.. மேடை நாடக உணர்வை கொண்டுவந்தாலும் அந்த காலகட்டத்திற்கு இது ஒன்றும் தவறல்ல.. ஒண்டிக்குடித்தனம் என்றாலே சலசலப்பிற்கு கேட்கவா வேண்டும்.. அதிலும் அங்கு ஒரு மடிசார் மாமி இருந்தால் .. கேட்கனுமா என்ன? அதிலும் இந்த மாமி ஒரு சினிமா பைத்தியம் தான் பார்த்த சினிமா கதாப்பாத்திரங்களுடன் ஒப்பிட்டு பேசுவதே இவரது வேலை.. மாமியின் வர்ணிப்பு போதும் கதைக்கு போடா என்று நீங்கள் சொல்வது என் காதில் கேட்கிறது... இதோ கதைக்குள் நுழைவோம்.. கதை ஒரு அனாதையை சுற்றி... அவனை சுற்றியிருக்கும் மக்கள் அவனை எவ்வளவு உபயோகப்படுத்தி கொள்கிறார்கள் என்பதே கதை.. அதுவும் எப்படி? அவன் ஒரு மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டாய காதல் புரியும் வரை .. பாலசந்தரால் தானய்யா இப்படி கையாள முடியும்.. நடுத்தரவர்க்கத்திற்கே உரிய போட்டி, பொறாமை,ஹிபோக்ரஸி இந்த இயல்புகளை கதையாக கதையின் பாத்திரங்களாக்க நம்மவரால் தான் முடியும் மொத்த படமும் ஒண்டுகுடித்தனத்திலேயே படமாக்கப்பட்டிருப்பதும் இந்த கருத்தை வலியுறுத்தத்தான்..இந்த ஒண்டுகுடித்தனத்தில் வாழ்பவர்கள் சுய நலவாதியாகவும், நண்பர்களாகவும், தம்மை பற்றி கவலைப்படுபவர்களாகவும்,அப்பாவியாகவும்,எதையும் கண்டுகொள்ளாதவர்களாகவும், மற்றவர்கள் இவர்களை உரிஞ்சுவது தெரிந்தும் ஒன்றும் செய்ய இயலாதவர்களாகவும் இந்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் அழகாக புட்டு புட்டு வைத்திருப்பார் இயக்குனர் சிகரம்.. இந்த மனிதர்கள் எல்லாம் ஒரு கூறையின் கீழ் வாழ்ந்துகொண்டு, தங்களின் அன்றாட கவலைகளை சொல்லிக்கொண்டும், தங்கள் செயல்களினால் பின்னிய வலையிலே(கூட்டில்)வாழ்ந்து கொண்டுடிருக்கும் இவர்களின் குறிக்கோள் எல்லாமே பணத்தை நோக்கியே.. பணம் பணம் மேலும் பணம்... இந்த மனிதர்களை நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொருத்தரிடமும் அடையாளம் கண்டு கொள்ளலாம், அவ்வளவும் ஏன் நம்மிடமே கண்டு கொள்ளலாம் அது தான் யதார்த்தம் அது தான் பாலசந்தர்... இப்படி எல்லோராலும் உதாசீனப்படுத்தபட்டாலும் ஒன்று இரண்டு நல்லவர்கள் இருக்கத்தானே செய்வார்கள் ஆம் மாதுவிற்கும் அப்படி ஆறுதல் சொல்ல இருவர் இருந்தனர் இந்த வீட்டில்.. மலையாள சேட்டன் முத்துராமனும், காம்பவுண்டின் பெரியவர் மேஜர் சுந்தரராஜனும். இருவரும் மாதுவின் நலம் நாடுபவர்கள். ஒரு பக்கம் மேஜர்- அவர் மனைவி சிவகாமி, இன்னொரு பக்கம் எஸ்.என்.லட்சுமி- அவரது கணவர். பக்கத்தில் பட்டு மாமி - கிட்டு மாமா (செளகார் ஜானகியும் ஸ்ரீகாந்த் கூடவே ஒரு இணைப்பு ஆம் ஒரு குழந்தையும்) மாடியில் மனோரமா, அவரது அண்ணன் எம்.ஆர்.ஆர்.வாசு, முத்துராமனும் மாடியில் ஒரு அறையில் மற்றும் டைப்பிஸ்ட் கோபு, காத்தாடி ராமமூர்த்தி என ஒரு பட்டாளமே இருக்கும் இந்த ஒண்டிக்குடித்தனத்தில்.. இதன் நடுவே ஜெயந்தி வரும் காட்சி .. அப்பப்பா .. ஜெயந்தி பெங்களூரில் படிப்பதாக சொல்கிறார் அவரது அம்மா எஸ்.என்.லெட்சுமி .. அவள் வந்த உடன் ஸ்ரீகாந்த ஊத செளகார் தூபம் போட ஜெயந்தி பெங்களூரில் ஆஸ்பத்திரியில் இருந்த விவரம் தெரியவருகிறது. உடனே மற்றவர்களின் நடவடிக்கைகளை பார்க்க வேண்டுமே.. ஜெயந்தியை பைத்தியம் என்று சொல்வதும் பயந்துகொண்டு யாரும் அவரிடம் பேசாமல் இருப்பதும்... .. இப்படி எல்லோராலும் புறக்கனிக்கப்பட்ட இரண்டு உள்ளங்கள் ஒன்றை ஒன்று நேசிக்க தொடங்குகின்றன.ஆம் ஜெயந்தியும் நாகேஷ�ம் காதலிக்க தொடங்குகிறார்கள் ஆம் கட்டாய காதல் தான் .. ஜெயந்தியை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை இவர் ஆஸ்பத்திரியில் இருந்த விவரம் தெரிந்ததால் ஓடிவிட எஸ்.என்.லெட்சுமி ஜெயந்தியை மாதுவின் தலையில் கட்ட நினைக்க . மாதுவோ தானாக வலையில் விழ.. இரு உள்ளங்களும் காதல் உலகத்தில் சஞ்சரிக்க தொடங்குகின்றன.. இதற்கிடையில் மாதுவின் படிப்புத் திறமையை கண்டு ஒரு பெரும் பணக்காரர் இவரை தத்து எடுக்க போவதாக சொல்ல மற்றவர்கள் மாதுவை கவனிப்பதை பார்க்க இரு கண்கள் போதாது. அவ்வளவு கவனிப்பு பிளாஸ்க், கடிகாரம், டேபிள் பேன் என அமர்க்கள படுகிறது.. கூடுதலாக மாதுவின் கல்லூரி முதல்வர் தன் மகளை மாதுவிற்கு திருமணம் செய்து கொடுக்க முன்வருகிறார். இதையெல்லாம் மாது ஏற்றுக்கொண்டானா இல்லையா என்பதே கதை.. மாதுவின் மனம் குழந்தையை போன்றது .. இதையெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டு பாரு(ஜெயந்தி)வுடன் இணைகிறார்.. மாதுவேடத்திற்கு நாகேஷ் தவிர யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை. அவ்வளவு இயல்பான நடிப்பு. பிறவிக்கலைஞனய்யா எங்கள் குண்டுராவ்.. ஜெயந்தி .. எவ்வளவு அழகான இயல்பான வெளிப்பாடு .. ஒரு சின்ன தவறான பேச்சைக்கூட தாங்கி கொள்ள முடியாத குணம் மேலும் மன நிலை மருத்துவமனையில் இருந்துவிட்டு வந்ததால் இவரை மற்றவர்களும் சரி பெற்றவர்களும் சரி .. புண்படுத்த இவர் நாகேஷின் வெகுளித்தனத்தில் அடைக்கலம் பெருகிறார்.. சமுதாயத்தால்/சமூகத்தால் ஒதுக்கப்பட்ட/வஞ்சிக்கப்பட்ட இரு உள்ளங்கள் காதலால் இணைகின்றன.. செளகார் ஜானகி .. பாலசந்தரின் படங்களில் கட்டாய இடம் இவருக்கு .. பாமா விஜயத்தில் காமெடி கலந்த பாத்திரம் என்றாலும் இதில் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த பாத்திரம் வெளுத்து வாங்கினார் என்று சொன்னால் அது சாதாரண வார்த்தை ... பேஷ் மேடம்... பட்டு மாமியாகவே மாறிவிட்டார் கிட்டு மாமா வேடத்தில் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு ஸ்ரீகாந்த் .. கன கச்சிதம்.. இவர்களுக்கு இணையாக எஸ்.என்.லெட்சுமி .. எனக்கு பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். தன் மகள் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருப்பது எல்லோருக்கும் தெரிய வரும் சமயத்திலும் சரி, ஜெயந்தியிடம் முகத்தை கடு கடுவென வைத்துக்கொண்டு பொரிந்து தள்ளுவதிலும் சரி, மாதுவிடம் டேய் சோறு போட்டவடா .... மறந்திடாதாடா..என .. சொல்லும் காட்சியிலும் இவர் நடிகையர் திலகம் என்றால் அது மிகையில்லை... பாலசந்தருக்குள் இருக்கும் அந்த ஜீனியஸ்/படைப்பாளியால் இப்படி நடுத்தர வர்கத்தினரின் போலி கவுரவத்தையும் அவர்களின் பண வெறியையும் அழகாக வெளிக்கொண்டு வந்திருப்பார் திரைக்கதையில்.. மனிதர் எங்கோ பிறந்திருக்க வேண்டியவரய்யா. முகத்தையே காட்டாமலும் சில கதாபாத்திரங்களை உருவாக்க முடியும் என நிரூபித்தவர் எங்கள் பாலசந்தர். ஆம் இருமல் தாத்தா .. இங்கே மீண்டும் வி.குமார்-வாலி- பாலசந்தர் கூட்டணி தொடர்கிறது.. பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடல் , பிராமண பாஷை பாடல்களின் முன்னோடி ஆம் எந்த பாடல் பற்றி சொல்கிறேன் என்று தெரிந்திருக்குமே.. அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா அவ ஆத்துக்காரர் கொஞ்சுரத கேட்டேளா என செளகாரும் - ஸ்ரீகாந்தும் பாடும் பாடல் இன்றும் பிரபலமான பாடல் வாலியின் நகைச்சுவை வரிகளும், சுசீலாம்மாவும், செளந்தரராஜன் ஐயாவும் பாடும் அழகும், குமாரின் எளிமையான இனிமையான மெட்டும் ஒரு கலக்கல்... சுசீலா: ஏன்னா, நீங்க சமர்த்தா? நீங்க அசடா? சமர்த்தா இருந்தா கொடுப்பேளாம் அசடா இருந்தா பறிப்பேளாம் டி.எம்.எஸ்: ஏண்டி, புதுசா கேக்குறே என்னைப் பார்த்து? சுசீலா: அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா? அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? ஏன்னா? அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா? அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பொடவையா வாங்கிக்கறா பட்டு பொடவையா வாங்கிக்கறா அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா? அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? டி.எம்.எஸ்: அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி? அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி..பட்டு அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி? அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கு ஏதடி? பட்டு புடவைக்கு ஏதடி? அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி? சுசீலா: உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு என்னத்தைக் கண்டா பட்டு? உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு என்னத்தைக் கண்டா பட்டு? டி.எம்.எஸ்: பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு சுசீலா: நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை நட்டுண்டா நேக்கு? நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை நட்டுண்டா நேக்கு? எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு டி.எம்.எஸ்: சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு? சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு? சுசீலா: எப்பொ இருந்தது இப்போ வரதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு உம் உம் அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா? அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? டி.எம்.எஸ்: ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு சுசீலா: பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டு? டி.எம்.எஸ்: ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு சுசீலா: என்னத்தை செய்வேள்? டி.எம்.எஸ்:சொன்னத்தை செய்வேன் சுசீலா: வேறென்ன செய்வேள்? டி.எம்.எஸ்: அடக்கி வெப்பேன் சுசீலா: அதுக்கும் மேலே? டி.எம்.எஸ்: ம்ம்ம் பல்லை உடைப்பேன் சுசீலா: அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா? அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? டி.எம்.எஸ்: பட்டு, அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி? பட்டு நமக்கேண்டி? பட்டு நமக்கேண்டி? பாடல் இதோ அடுத்தது ..காதலர்களின் கனவு.. தாமரை கன்னங்கள் தேன் மலர் கின்னங்கள் அழகான கற்பனை வாலியின் உபயம். பி.பீ.ஸ்ரீனிவாஸ்- சுசீலா குரல்களின் மற்றுமொரு மயக்கும் டூயட் ஆலிலை மேலொரு கண்ணனை போலிங்கு வந்தவனோ .. வாலி வாலிதானய்யா.. சுசீலா: ஆஆஆஆ ஸ்ரீனிவாஸ்: ம்ம்ம்ம்ம்ம்ம் சுசீலா: ஆஆஆஆ ஸ்ரீனிவாஸ்: ம்ம்ம்ம்ம்ம்ம் ஸ்ரீனிவாஸ்: தாமரைக் கன்னங்கள் தேன் மலர்க் கிண்ணங்கள் தாமரைக் கன்னங்கள் தேன் மலர்க் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும் போது பொங்கிடும் எண்ணங்கள் சுசீலா: மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன் மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன் மங்கை நான் கன்னித் தேன் காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் கைகளை மன்னித்தேன் மாலையில் சந்தித்தேன் ஸ்ரீனிவாஸ்: முத்து மலர்க் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ சுசீலா: ஆஆஆ ஸ்ரீனிவாஸ்: முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ சுசீலா: ஆஆ ஸ்ரீனிவாஸ்: முத்து மலர்க் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ சுசீலா: ஆஆஆ ஸ்ரீனிவாஸ்: முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ சுசீலா: ஆஆ சுசீலா: துயில் கொண்ட வேளையிலே குளிர் கொண்ட மேனியிலே துணை வந்து சேரும் போது சொல்லவோ இன்பங்கள் மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன் மங்கை நான் கன்னித் தேன் காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் கைகளை மன்னித்தேன் சுசீலா: ஆலிலை மேலொரு கண்ணனை போல் இவன் வந்தவனோ நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ ஆலிலை மேலொரு கண்ணனை போல் இவன் வந்தவனோ நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ ஸ்ரீனிவாஸ்: சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கண்ட தேன் கனியை உடை கொண்டு மூடும் போது உறங்குமோ உன்னழகு தாமரைக் கன்னங்கள் தேன் மலர்க் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும் போது பொங்கிடும் எண்ணங்கள் சுசீலா: மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன் மங்கை நான் கன்னித் தேன் காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் கைகளை மன்னித்தேன் மாது பெரும் பணக்காரன் என்று தெரிந்ததும் ஒரே களேபரம்.. பாடல் பிறக்கிறது.. முத்துராமன்(எஸ்.சி.கிருஷ்ணன்) ஆரம்பிப்பதால் சேதி கேட்டோ என மலையாள வாசம் நடுவில் மூன்று பெண்களும் போடும் போட்டி (அஷ்டலெட்சுமியும் என சுசீலா, ஜமுனாராணி மற்றும் ஸ்வர்ணா(குமாரின் மனைவி)) படு தமாஷ்.. கிருஷ்ணன்: சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ? ஹா ..சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ? மாடிப் படி மாது போயி மாடி வீட்டு மாது ஆயி ஹா ...சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ? சுசீலா: அஷ்டலஷ்மியும் நவ நிதியும் இஷ்டமாய் உன்னிடம் சேர்ந்ததய்யா அஷ்டலஷ்மியும் நவ நிதியும் இஷ்டமாய் உன்னிடம் சேர்ந்ததய்யா அன்ன பூரணி என்னைப் பாரு நீ அன்ன பூரணி என்னைப் பாரு நீ கஷ்டம் யாவுமே தீர்ந்ததய்யா ..அய்யா .. அய்யா....அய்யய்யா கிருஷ்ணன்: எந்தா, சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ? ஹா ..சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ? மாடிப் படி மாது போயி மாடி வீட்டு மாது ஆயி ஜமுனா: நேத்து வரை நெனச்சதெல்லாம் மாறிப் போச்சு நான் பார்த்த முகம் பள பளப்பும் ஏறிப் போச்சு ஆஹா .. நேத்து வரை நெனச்சதெல்லாம் மாறிப் போச்சு நான் பார்த்த முகம் பள பளப்பும் ஏறிப் போச்சு கோலாலம்பூர் கோடீஸ்வரன் கொடி பறக்குதடி கோலாலம்பூர் கோடீஸ்வரன் கொடி பறக்குதடி அந்தக் கொடி பறக்குற இடத்துலே தான் குடி இருக்குதடி மனசு குடி இருக்குதடி ஸ்வர்ணா: வாது சூது தெரியாத மாது கண்ணா இந்த மாது சொன்ன வார்த்தையை நீ கேளு கண்ணா வாது சூது தெரியாத மாது கண்ணா இந்த மாது சொன்ன வார்த்தையை நீ கேளு கண்ணா வஞ்சகர்கள் உலகமிது மாது கண்ணா வஞ்சகர்கள் உலகமிது மாது கண்ணா இதில் என்னை மட்டும் மறக்காதே மாது கண்ணா என்னை மட்டும் மறக்காதே மாது கண்ணா தட்டெடுத்து வந்த போது மாது கண்ணா தட்டெடுத்து வந்த போது மாது கண்ணா அன்னம் தட்டாமல் போட்ட கைகள் இது தான் கண்ணா அன்னம் தட்டாமல் போட்ட கைகள் இது தான் கண்ணா கிருஷ்ணன்: ஹா, சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ? ஹா ..சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ? மாடிப் படி மாது போயி மாடி வீட்டு மாது ஆயி டைட்டில் பாட்டு -வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் .. முதலில் டி.எம்.எஸ் பாடுவதாக இருந்த பாட்டு அவர் மெட்டு சரியில்லை என்று கூற பாலசந்தரோ மெட்டு இது தான் பாடுபவர் வேறு ஒருவர் என்று கூரியதால் சீர்காழியார் பாடினார். என்ன அருமையான வரிகள் .. வாலி ஐயாவின் நம்பிக்கையூட்டும் வரிகள். பாடல் பிரபலமடைந்தது .. அப்போதைய முதல்வர் திரு அண்ணா அவர்கள் மிகவும் பாராட்டி ரசித்த படம் இது என்பது செய்தி.. எதிர் நீச்சல் .. இன்று பார்த்தாலும் புதுசாகவே இருக்கும் .. சலிப்பே வராது..அது தான் பாலசந்தர் பாலசந்தரின் அடுத்த படத்துடன் விரைவில்-ராஜேஷ்