Tuesday, January 11, 2022

பாலச்சந்தர் -பாகம் 10 எதிரொலி

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் -பாகம் 10 10. எதிரொலி
எதிரொலி என்றால் என்ன நமது குரல் நமக்கே கேட்பது இன்னும் பெரிதாக கேட்பது .. அது தான் இந்த கதையின் சாராம்சம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் முதன் முதலாக பாலச்சந்தருடன் நடிகர் திலகம் இணைந்த படம் இது. ஆனால் இதுவே அவர்கள் பணி செய்த கடைசி படமும் கூட. இரு மேதைகள் இணைந்தால் ஒன்று பலன் இருமடங்காகும் இல்லையென்றால் முயற்ச்சி வீணாகும்.. இதில் எது நடந்தது என்று தெரியவில்லை . சங்கர் ஒரு பெரிய வக்கீல். ஏழை எளியவருக்காக வாதாடும் வக்கீல். சிலருக்கு பண உதவியும் செய்பவர். இப்படி இருக்க ஒரு முறை கோர்ட்டில் கட்ட வேண்டிய பணத்தை பறிகொடுக்க அதை புரட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட கதையில் சூடு பிடிக்கிறது. எந்த 10 கட்டளைகள் இவரின் வாழ்க்கையை முறையாக செல்ல பயன்படுத்தப்பட்டதோ அதே கட்டளைகளை மீறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அதோடு சேர்த்து கொலைப்பழியும் கூட .. அதிலும் மேஜர் இவரை அடிக்கடி மிரட்டுவதும் இவர் மிரளுவதும் தூள் படம் பாலச்சந்தரின் படமும் ஆகாமல் நடிகர் திலகத்தின் படமாகவும் இல்லாமல் ஒரு வித திரிசங்கு சொர்க்கத்தில் மாட்டிக்கொண்ட கதை.. ஆம் கொஞ்சம் இழுவை .. தேவையில்லாத காட்சிகள் ..என படம் கொஞ்சம் சொதப்பலாகிவிட்டது.. திரையிசைத்திலகம் வாலி என்றாலும் பாடல்கள் எல்லாமே சுமார் ரகம். ஆனாலும் நமக்கு நடிப்புக்கு பஞ்சமில்லை. நடிகர் திலகமும் சரி விஜயாவும் சரி அருமையாக நடித்திருப்பார்கள். குறிப்பாக விஜ்யா ஒவ்வொரு முறையும் நடிகர் திலகம் தப்பு செய்ய நினைக்கும் போதும் சரி விஜயாவின் அந்த பயமும் சரி நன்றாக செய்திருப்பார். ரோஜா ரமணி வழக்கம் போல் ஓகே ரகம். நாகேஷ் – ஜி.சகுந்தலா நகைச்சுவை சிரிக்க வைக்காத ஒன்று. தங்கை லெக்ஷ்மி சிவகுமார் காதல் ஓகே ரகம். ஏற்கனவே படங்களில் பார்த்த ஒன்று. இன்றும் இது கே.பியின் படமா நடிகர் திலகத்தின் படமா என்ற குழப்பம் உண்டு. ஒரு வேளை படம் வெற்றி பெற்றிருந்தால் இவர்கள் இருவரது கூட்டணி நிலைத்திருக்குமோ என்னவோ.. பாலச்சந்தரின் முத்திரை அங்கங்கே உண்டு. நடிகர் திலகத்தின் நடிப்பு நிறைய உண்டு. அடுத்த படத்துடன் விரைவில் ராஜேஷ் (Rajesh Venkatasubramanian)

No comments:

Post a Comment