Tuesday, January 11, 2022
மறக்க முடியாத சின்னத்திரை பெண் நடிகைகள்
மறக்க முடியாத ஆண் முகங்களை தொடர்ந்து மறக்க முடியாத பெண்களை பார்ப்போம்.
எத்தனையோ பெண் நடிகைகள் தொலைக்காட்சியில் தோன்றினாலும் சிலர் தங்களின் சிறப்பான நடிப்பால் நம்மை கவரத்தான் செய்துள்ளனர். இதோ நம்மை கவர்ந்த சிலர்
ராணி சோமனாதன்.
மிகச்சிறந்த நடிகை. திரைப்படங்களில் 70’களிலிருந்து நடித்திருந்தாலும் தொலைக்காட்சியில் தனி முத்திரை பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ருத்ர வீணையில் அந்த வேடத்தில் அசத்தியிருப்பார். நிறைய தொடர்களில் குறும்பாகவும், துடுக்காகவும் பேசி நம்மை அசத்துவார். சில வருடங்களுக்கு முன் இவர் இறந்துவிட்டார். இருந்தாலும் மிகச்சிறந்த நடிகை.
எஸ்.ஆர்.சிவகாமி:
பழநி படத்திலியே எஸ்.வி.சுப்பைய்யாவின் மனைவியாக நடித்திருப்பார். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் வந்திருந்தாலும் தொலைக்காட்சியில் நல்ல வேடங்களை பாலச்சந்தர் இவருக்கு வழங்கினார். கையளவு மனசு தொடரில் வாலி ஐயாவின் மனைவியாக அருமையாக நடித்திருப்பார். காதல் பகடையில் கூட ரேணுகாவின் அத்தையாக அருமையாக நடித்திருப்பார். மிக்சசிறந்த நடிகை . இவர் மறைந்த செய்தி கூட வெளிவரவில்லை என்பது வருந்ததக்க ஒன்று.. என்ன செய்வது பிரபலமில்லையென்றால் இவ்வுலகம் மறந்தேவிடும்.
எம்.பானுமதி:
பல படங்களில் அற்புதமான வேடங்கள் செய்தவர். ஒரு சீன் வந்தாலும் தில்லானா மோகனாம்பாளில் நம்மை அசத்தியவர். தமிழ் உச்சரிப்பிலும் அசத்துபவர். அருமையான நடனக்கலைஞரும் கூட. எல்லாம் இருந்தும் ஏனோ அடையவேண்டிய புகழ் அடையவில்லை இருந்தாலும் நடிப்பில் என்றுமே நம்மை அசத்தியவர். பாலச்சந்தர் தனது தொடர்களில் அருமையான வேடங்கள் தந்தவர். அண்ணி, ரமணி போன்ற தொடர்களில் அளவான நடிப்பை நமக்கு வழங்கியவர். இவர் மறைந்த் செய்தியும் வெளியே வரவில்லை என்பது வருத்தமான செய்தி.. மறக்க முடியாத முகம்.
பாம்பே ஞானம்.
பாலசந்தர் சார் அறிமுகப்படுத்திய பல நடிகர்களில் இவரும் ஒருவர். நாடக அனுபவம் இருந்ததால் தொலைக்காட்சி தொடர்களில் அழகாக பொருந்தினார்.
பல தொடர்களில் பல வேடங்களில் ஜொலித்தவர்
வத்ஸலா ராஜகோபால்
துடுக்கான பாட்டி வேடங்களில் நம்மை எப்பவுமே மகிழ்விப்பவர் இவர். பல தொடர்கள் பல வேடங்கள் என எல்லாவற்றிலும் அசத்துபவர் இவர்.
ரேணுகா:
பல துக்கடா வேடங்களை சினிமாவில் செய்திருந்தாலும் தொலைக்காட்சியில் தான் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக்கொண்டவர். பெண்கள் பிரதான வேடங்களில் நடிக்கும் தொடர்களுக்கு முன்னோடி.
டி.ஆர்.லதா:
தூர்தர்ஷன் முதல் இன்று வரை பல தொடர்களில் நடித்துவருபவர். மென்மையான வேடங்களில் ஜொலிப்பவர்
நாஞ்சில் நளினி:
இவரும் பல தொடர்களில் அழகான வேடங்களில் நடித்தவர்.
அனிதா மேத்யூஸ்:
அடேயப்பா இவரைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும், நில் கவனி கிரேசியில் மார்டன் பெண்ணாக வருவதாகட்டும், இரண்டாம் சாணக்யனில் அந்த அன்பான பாந்தமான மாமியாக வருவதாகட்டும், பிரேமியில் வரதராஜனுக்கு மனைவியாக அருமையான வேடம், ஜன்னலில் வாயாடியாக சுகன்யாவின் அம்மாவாகவும் ஜொலித்திருப்பார். ஹாட்ஸ் ஆப்…
யுவஸ்ரீ:
இவரும் தூர்த்ர்ஷன் முதல் இன்று வரை பல தொடர்களில் பல்வேறு தொடர்களில் பல்வேறு வேடங்களில் ஜொலித்தவ்ர். கொடுத்த வேடத்தை செவ்வனே செய்து முடிப்பவர்.
நித்யா: நடிப்பு குரல் கொடுப்பது என பலவற்றிலும் ஜொலிப்பவர். இவரும் எந்த வேடம் செய்தாலும் அருமையாக செய்பவர்.
சுமங்கலி:
கிரேசி மோகனின் ஆஸ்தான நாயகி. பல தொடர்களில் நகைச்சுவை பாத்திரங்கள் செய்தவர். இவரையும் அழுவாச்சி வேடங்கள் செய்யவைத்து விட்டது இந்த தொலைக்காட்சி.. என்ன கொடுமை சார் இது
மதுரை சோபனா:
இவரும் பல தொடர்களில் நல்ல வேடங்கள் செய்தவர்.
ஷைலஜா:
இவரும் பல தொடர்களில் நம்மை அசத்தினார். குறிப்பாக அந்த ருத்ரவீணை தொடரில் அடேயப்பா என்ன நடிப்பு . அந்த பாத்திரமாகவே மாறியிருப்பார் என்றால் மிகையில்லை, இவரது திறமைக்கு இன்னும் பாத்திரங்கள் கிடைக்கவில்லை. கிடைக்க வாழ்த்துவோமாக.
மீரா கிருஷ்ணன்
பாடகியாக வந்து , செய்திவாசிப்பதுடன் நடிக்கவும் தொடங்கி அதிலும் சிறப்பாக செய்ய முடியும் என நிரூபித்தவர். பாந்தமான அம்மா வேடங்களில் ஜொலிப்பவர்
தேவதர்ஷிணி:
தொலைக்காட்சியின் ஊர்வசி எனலாம் . எல்லா வேடங்களிலும் ஜொலிப்பவர். எத்த்னை எத்தனை தொடர்கள் எத்தனை வேடங்கள் ..
காயத்ரி: மஹாதேவ் முதல் மெட்டி ஒலி வரை அருமையான வேடங்களில் நடித்தவர். மென்மையான வேடமென்றால் காயத்ரி
தேவிப்ப்ரியா:
சின்னத்திரை வில்லி .. ஆம் அப்படிப்பட்ட வேடங்கள் செய்வதில் வல்லவர்.
நல்ல குரல்வளம் கொண்டவர்.
இவர்களை தவிர இன்னும் சிலரும் உள்ளனர். அடுத்த பகுதியில்.
(Rajesh Venkatasubramanian)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment