Tuesday, January 11, 2022

பாலசந்தர் - ஒரு பார்வை-1

இயக்குனர் சிகரம் பாலசந்தர் - ஒரு பார்வை .. பாகம்-1
நான் ஏற்கனவே தமிழ்மன்றத்தில் எழுதியதை கொஞ்சம் மெறுகேற்றி இங்கே கோதை நோட்ஸில் எழுதலாம் என இந்த முயற்சி. பாலசந்தர் - கே.பி என்று சினிமா வட்டாரத்தில் அழைக்கப்படும் பாலசந்தர் 60'களில் பல அமெச்சுர் நாடங்களை நடத்தி வந்தார். ஆங்கில் நாடங்கள் எழுதி அதை மேடையேற்றியுள்ளார் 1930ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில் பிறந்த இவர் இன்று சினிமா உலகின் பிரம்மரிஷி அதுவும் இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் சினிமா விதிமுறைக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது . ஆமாம் வெரும் கமர்ஷியல் படங்களை டைரக்ட் செய்து பெயர் பெற்றவர்களும் உண்டு ஆனால் இவரோ சமுதாய சிந்தனை, பெண் முன்னேற்றம் என எல்லா கால கட்டத்திலும் ஒரு பிரச்சனையை மையமாக கொண்டு படங்கள் எடுத்தார்.. பெரும்பாலும் வெற்றி கண்டார், சில சமயம் தோல்வியும் கண்டார். தோல்வி அவரை துவழவிடவில்லை இன்னும் நல்ல படங்கள் கொடுக்கவேண்டும் என்பதற்கு உந்துதலாக இருந்தது .. இந்த மேதை உருவாக்கிய காவியங்கள் எத்தனை எத்தனை உருவாக்கிய நடிப்பு நட்சத்திரங்கள் எத்தனை எத்தனை எந்த நடிகருக்காகவும் கதை உருவாக்காமல், எந்த பெரிய இசையமைப்பாளரை நம்பாமல், யாரை வைத்தும் தன்னால் படம் எடுக்க முடியும் அதில் வெற்றியும் அடைய முடியும் என்பதை பல நேரத்தில் நிரூபித்தவர் இவர். இவரது காவியங்களையும் , உருவாக்கிய நட்சத்திர பட்டாளத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக அலசுவோம் பாலசந்தர் - ஆமெச்சூர் மேடை நாடகங்கள் நிறைய நடத்திக்கொண்டிருந்தார் அவர். அவரது சதுரங்கம் முதலான நாடகங்களுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. சுந்தரராஜன், நாகேஷ் ஆகியோர், தங்களது வேலையை தவிர பிற நேரங்களில் பாலசந்தரின் நாடகங்களில் நடித்து வந்தனர். அப்பொழுதெல்லாம் திரையுலக பிரமுகர்களும் நாடகத்தில் நடிப்பது வழக்கம் மிகப்பெரிய கலைஞர்கள் நாடங்களை பார்க்க வருவது வழக்கம் அப்படி பாலசந்தரின் நாடகத்தை பார்த்த ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியார் அவரது நாடகமான் சர்வர் சுந்தரத்தை படமாக எடுக்க விரும்பினார். அதற்கு கதை திரைக்கதை அமைத்து கொடுத்தவர் பாலசந்தர் இயக்கியது கிருஷ்ணன் - பஞ்சு ( திரையுலகில் பிரேவிசிக்காத காரணத்தால் மற்றவர்கள் இயக்கினார்கள்) அதே போல் எம்.ஜி.ஆர் நடித்து பி.மாதவன் இயக்கத்தில் வந்த தெய்வத்தாய்(1964) படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதினார் தெய்வத்தாய் பாடல்களை இங்கே கேட்டு மகிழுங்கள் பி.மாதவன் இயக்கத்தில் சிவாஜி- தேவிகா நடித்த நீலவானம் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார்(1965) நீர்க்குமிழி 1966 பாலசந்தர் வாழ்கையில் மறக்க முடியாத ஆண்டு அவரது முதல் படைப்பாக நீர்க்குமிழி வெளிவந்தது. பாலசந்தரின் நாடகங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தவர் திரு.குமார்.இருவரின் நட்பும் வளர்ந்தது அதன் காரணமாக தன் முதல் படத்தில் குமாரையே இசையமைப்பாளராக்கினார் பாலசந்தர். நீர்க்குமிழி (1966) ஒரு ஆஸ்பத்திரியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. அந்த கால கட்டத்தில் இது புதுமையே.. (புதுமையை புகுத்தும் இன்னொருவர் ஸ்ரீதர்) கதையின் நாயகனாக தன் நாடகங்களில் நடித்து வந்த குண்டுராவயே( நாகேஷ்) போட்டார் பாலசந்தர். நாகேஷ் அந்த சேது கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் என்றால் மிகையில்லை சீனியர் டாக்டராக மேஜர் சுந்தர்ராஜன்,அவரது மகளாக செளகார் ஜானகியும் விளையாட்டு வீரராக கோபாலகிருஷணனும் நர்ஸாக ஜெயந்தியும் நடித்தனர். படம் நன்றாக ஒடியது.. பாலசந்தர் என்ற அந்த மனிதர் வெள்ளித்திரையில் மின்ன ஆரம்பித்தார் கதையும் சரி, கதாபாத்திர படைப்பும் பாலசந்தரின் தனிச்சிறப்பு.. ஆஸ்பத்திரியை காட்டும் போதும் சரி, மேலை நாடுகளில் என்னென்ன கருவிகள் இருக்குமோ அதைப்போல் காட்டியிருப்பார். படத்தில் மொத்தம் 3 பாடல்கள் ஆடி அடங்கும் வாழ்க்கையடா - சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் கன்னி நதி ஓரம் - பி.பீ.ஸ்ரீனிவாஸ்- சுசீலா குரல்களில் இனிமையான பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் ஆலங்குடி சோமு நீரில் நீந்திடும் மீனினமே சுசீலாவின் குரலில் சொக்க வைக்கும் பாடல் (வரிகள்:சோமு) பாடல்களை இங்கே கேளுங்கள் ஆக பாலசந்தரின் முதல் திரைக்குழந்தை பிறந்த கதை இதுதான் மள மள என அவர் ஏறிய ஏணி - அடுத்த பகுதியில் தொடரும் - ராஜேஷ்

No comments:

Post a Comment