Tuesday, January 11, 2022

பாலசந்தர்- பகுதி 2

பாலசந்தர்- பகுதி 2 பாலசந்தர் ஏறிய வெற்றி ஏணி
முதல் படம் வெற்றிய்டைந்த காரணத்தால் பாலசந்தர் உடனே புகழடைந்து விடவில்லை. (இன்றைய இயக்குனர்கள் ஒரு படத்திலேயே எங்கோ சென்றுவிடுகிறார்கள்) பாலசந்தரின் திறமையை நீர்க்குமிழியில் பார்த்த வேலுமணி(சரவணா பிலிம்ஸ்) தன் அடுத்த படத்தை பாலசந்தர் இயக்க வேண்டினார். பாலசந்தர் ஒப்புக்கொண்டார், தனது நண்பர் வி.குமாரையே இந்த படத்திற்கும் இசையமைப்பாளாராக்கினார் .. நாணல்(1965) படம்: நாணல் .. ஆஹா பெயரிலேயே என்ன ஒரு அழகு .. படமும் அதே போல் அற்புதம். ஒரு நிகழ்வை வைத்தே ஒரு கதையை உருவாக்க ஹாலிவுட் போல் தனக்கும் திறமை உண்டு என நிரூபித்தார் கே.பி. Desperate Hours என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் நாணல். சிறையிலிருந்து தப்பித்து செல்லும் 4 குற்றவாளிகள் ஒரு வீட்டில் புகுந்து அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்ச்சிப்பதும் அதன் விளைவுகளுமே கதை. கதை கேட்பதற்கு ரொம்ப சாதரணமாக இருந்தாலும் அதை திரையில் பார்த்தால் அதன் பயங்கரம் தெரிய வரும். அமைதியே உருவாக இருந்த அந்த வீட்டில் 4 புதியவர்கள் அதுவும் குற்றவாளிகள் இருந்தால் எப்படி இருக்கும் நினைக்கும் போதே நடுக்கம் ஏற்படுகிறதல்லவா அதே தான். கே.விஜயன், அவரது மனைவி செளகார் ஜானகி,தம்பி ஸ்ரீகாந்த், தங்கை கே.ஆர்.விஜயா மற்றும் ஒரு முதியவர் என அளவான குடும்பம். குடும்பத்தலைவர் ஊருக்கு சென்ற பின் .. வானொலியில் அறிவிப்பு ஆம் சிறையிலிருந்து 4 குற்றவாளிகள் தப்பிவிட்டார்கள் என்று .. வீட்டின் அழைப்பு மணி அடிக்க செளகார் திறக்க முதலில் ஒருவன் ... தொலைபேசி சரி செய்பவனாக மீண்டும் அழைப்பு மற்றொருவன் குழாய் சரி செய்பவனாக இப்படியே நால்வரும் வீட்டிற்குள் வருகை .. செளகாரின் முகத்தில் அதிர்ச்சி .. கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் விஜயாவும், ஸ்ரீகாந்தும் செளக்காரின் முக மாற்றத்தை கண்டு வியக்க பின் விவரம் தானக தெரிய வர வீடே மயான அமைதி ஒவ்வொரு வினாடியும் என்ன நடக்கும் என்று ஆர்வத்தை தூண்டும் வகையில் காட்சிகளை நகர்த்தியிருப்பார் பாலசந்தர். வீட்டிற்கு அடிக்கடி வரும் குடும்ப நண்பர் வேடத்தில் நாகேஷ் .. விஜயாவை காதலிக்கும் போலீஸ் அதிகாரியாக முத்துராமன்.. என எல்லா பாத்திர படைப்பும் அளவோடு அழகாக செதுக்கப்பட்டிருக்கும். விஜயன் வீடு திரும்ப அவரை பழிவாங்கும் நோக்கத்தில் வந்திருக்கும் மேஜர் அவரை சுட முயற்ச்சிக்க விஜயன் தலையை குணிய வில்லன்கள் இருவரும் தங்களை சுட்டுக்கொண்டு இறப்பதாக கதை முடியும். மேஜர் - பாலசந்தரின் ஏறக்குறைய அனைத்துப் படங்களில் இவருக்கு இடம் உண்டு.. முதல் படத்தில் எப்படி நாகேஷ் முக்கியமோ இந்த படத்தில் மேஜர் அவ்வளவு முக்கிய பங்கு வகித்திருப்பார்.. அந்த கோபம் கொண்ட கொள்ளையன் வேடத்தில் மேஜர் கன கச்சிதம் அதே சமயம் கன்னியம் தவறாதவரும் கூட . தன் கூட்டாளி ஒருவன் விஜயாவிடம் தகாத முறையில் நடக்க முயல அவனை இவர் சுடும் காட்சி அற்புதம்.. மொத்தத்தில் படத்தில் முதல் மதிப்பெண் பெருபவர் மேஜர்.. ஜானகி - படத்தில் ஆரம்பம் முதல் இந்த நால்வரிடம் மாட்டிக்கொண்டு பாடுபடும் பாத்திரம் இவருக்கு.. பாலசந்தர் இவர் மேல் என்றுமே நம்பிக்கை வைத்திருப்பார் ஏனென்றால் இவர் நம்பிக்கையை பொய்யாக்கியதே இல்லை .. ஸ்ரீகாந்த்..ஸ்ரீதரின் பெருமைக்குரிய அறிமுகம் என்றாலும் பட்டை தீட்டியது பாலசந்தர். பெரிய உத்தியோகத்தில் இருந்த ஸ்ரீகாந்த் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் நாடகத்திலும் பின் சினிமாவிலும் நுழைந்தார். கல்லூரி மாணவன் அல்லவா.. அந்த வயதுக்கே உரிய முருக்கு, ஆத்திரம், ஏதாவது செய்து இந்த நால்வரையும் காவல்துறையிடம் காட்டி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என எல்லாம் ஒரு சேர்ந்த நடிப்பு. நாகேஷ் - வீட்டிற்கு சைக்கிளில் வருவார்.ஓசியில் டிபன் காப்பி சாப்பிட்டு கதை அளந்துவிட்டு செல்வார்.. ஏன் ஒருவரும் ஒழுங்காக பதில் சொல்லவில்லை என்ற சந்தேகத்தை கிளப்பும் முதல் மனிதர் இவர். பின்னர் ஒரு கைதியிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் காட்சி நகைச்சுவை.. கைதிகள் பிடிபட உதவும் காட்சியில் இவரது நடிப்பை பற்றி சொல்லவும் வேண்டுமா? முத்துராமன் - காவல் அதிகாரி வேடம் .. நன்றாக பேசி பழகிய விஜயா ஏன் ஒழுங்காக பேசுவதில்லை என்ற குழப்பமும் சரி, வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டு நடிக்கும் விதமும் சரி.. நிஜமாகவே இவர் நவரசத்திலகம் தானய்யா விஜயா - அளவான வேடம், சிறப்பான நடிப்பு... படத்தில் இன்னொரு பலம் -இசை அதற்கு சொந்தக்காரர் திரு.வி.குமார் ஆம் படத்தின் தொடக்கத்தில் அழகான பாடல் " குயில் கூவி துயில் எழுப்ப" சூலமங்கலம் ராஜலெட்சுமியின் குரலில் அற்புத பாடல் ஆலங்குடி சோமுவின் வரிகளுக்கு குமாரின் இசை அற்புதம் முத்துராமன் -விஜயா காதல் விளையாட்டில் ஒரு அழகான பாடல் .. உவமைக் கவிஞர் சுரதாவின் வரிகள் இன்று கேட்டாலும் திகட்டாத தமிழ் ஆம் விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் - டி.எம்.எஸ் - சுசீலா குரல் ஜாலத்தில் பாடல் இதம் பதம்.. கைதிகள் விஜயாவை ஆடச் சொல்ல கூண்டுக்குள் சிக்கிய கிளியாக அவள் பாடி ஆட சுசீலாவின் குரலில் ஒலிக்கும் என்னதான் பாடுவது எப்படித்தான் ஆடுவது .ஆஹா அருமையான பாடல் அல்லவா இது மொத்தத்தில் இது முழுக்க முழுக்க பாலசந்தர் படம். அவரது இயக்குமும் சரி, கதாப்பாத்திர அமைப்பும் சரி பரவலாக பேசப்பட்டது.. ஆக பாலசந்தர் பிரபலமடைய ஆரம்பித்தார். பாலசந்தர் படம் என மக்கள் கூற ஆரம்பித்தனர் முழு வேகத்தில் படங்களை இயக்க ஆரம்பித்தார் அடுத்த பகுதிக்கு காத்திருங்கள் -ராஜேஷ்

No comments:

Post a Comment