Monday, March 15, 2021

எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 10
கவ்வாலி என்பது சூபி எனப்படும் பாடல் வகையை சார்ந்தது. பக்தி உணர்வுடன் பாடுவது இதன் தனித்துவம்.. கடவுளை நெருக்கமாக உணர்ந்து பாடுவதாக அமைந்தது. பொதுவாக மகான்கள், ஆசான் போன்றவர்களை புகழ்ந்து பாடுவதாய் அமைந்தது இந்த வகை பாடல்கள் கசல் வகையில் அமைந்த இந்த பாடல் வகை பொதுவாய் இஸ்லாமியனரே பாடி வந்தனர். இது 8’ம் நூற்றாண்டில் பெர்ஸிய நாட்டில் புழக்கத்தில் இருந்ததாகவும் 11’ம் நூற்றாண்டில் இந்தியா,துருக்கி, உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகளுகளிலும் பரவியது. பொதுவாக உருது மொழியிலும் பின்னால் பஞ்சாபி மொழியிலும் பாடுவதாய் அமைந்தது மெல்ல மெல்ல பிராந்திய மொழிகளிலும் பாடப்பட்டது அரசர்களின் காலத்தில் அரசவையில் பாடல், ஆடல் என எப்பொழுதும் கலைகளை வளர்த்தவிதமாய் இருந்தனர். ஒன்று போர்க்காலத்தின் பின் மன்னர்களுக்கும் மற்றவர்களுக்குமான பொழுதுபோக்கு அம்சாகவும் அதே சமயம் பாரம்பரிய கலைகளை வளர்க்கும் விதமாகவும் நாட்டியம், பாடல், கவிதை என அரசவையில் இருந்த காலங்கள் உண்டு 20’ம் நூற்றாண்டில் இது எல்லா நாடுகளிலும் பிரபலமடைந்தது. இதில் பெரும்பாலும் தபலா, டோலக், சாரங்கி போன்ற வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டது. கைத்தட்டலும் சேர்ந்து அந்த இடத்தையே மெய் மறக்க செய்யும் ஒரு வித Trance நிலையை அடைவது தான் இதன் நோக்கமாக இருந்தது. முகலாய அரசர்களின் சபையில் பெரும்பாலும் இந்த கவ்வாலி வகையான பாடல்களும், அதையொட்டிய நடனமான முஜ்ரா போன்றவை பிரசித்தி பெற்றன.. பிற்காலத்தில் முஜ்ரா என்பது வேறு விதமாய் பயன்படுத்தப்பட்டது பின்னர் கூட்டமான சபையில் ஒரு சிலர் பாடியும் பேசியும் கைத்தட்டலுடன் பாடும் பாணியை எல்லா மொழியிலும் ஆரம்பித்து பின் திரைப்படங்களிலும் அதை பலரும் கையாண்டிருக்கின்றனர். இந்த பாணி பாடல்கள் பெரும்பாலும் ஹிந்தி படங்களில் இடம்பெற்றன . அரசர்கள் சம்பந்தபட்ட படங்களிலும் சரி, பின் சமூக படங்களிலும் அது போன்ற சூழல்களை உருவாக்கி அது போன்ற பாடல்களை உருவாக்கினர். பிரபலமான ஹிந்தி கவ்வாலி பாடல்கள் என்றால் முகலே ஆசம் திரையில் ஒலித்த தேரி மெஹ்பில் மே(உந்தன் சபையில் எந்தன் விதியை), நா தோ காரவான் கி தலாஷ்(பர்ஸாத் கி ராத்), பர்தா ஹை பர்தா(அமர் அக்பர் அந்தோனி), ஹை அகர் துஷ்மன்(ஹம் கிஸி ஸே கம் நஹின்) க்வாஜா மேரே க்வாஜா - ஏ,ஆர்.ரகுமான் - ஜோதா அக்பர் இன்னும் பல பாடல்களை சொல்லலாம் . இவை எல்லாம் ஒரு வித சபையில், கூட்டத்தில், களிப்பிற்காக பாடும் பாடலாக அமைந்த பாடல்கள் இது போல் கவ்வாலி பாடல்கள் தமிழிலும் அன்றைய காலம் முதல் வந்துள்ளன... அதெல்லாம் கூட சபையில் பாடுவதாக அமைந்தவை .. உந்தன் சபையில் எந்தன் விதியை(சுசீலாம்மா, ஜிக்கி) அக்பர் இசை நெளஷாத்(முகலே ஆசாம் தமிழ் டப்பிங்) நான் தமிழில் முதல் கவ்வாலி பாடல் வேதா அவர்கள் ஹிந்தியிலிருந்து கொண்டு வந்த “பாரடி கண்ணே என்று நினைத்திருந்தேன்” பின்னர் தான் தெரிந்தது மெல்லிசை மன்னர்கள் 1957’ல் பத்தினி தெய்வம் திரையில் முஜ்ரா வகையில் “வேதாந்தம் பேசுவாங்க பாடலை “ அமைத்தனர் ஆனால் ஆச்சர்யமான விஷயம் கைதிகளின் களைப்பு போக பாடும் பாடல் கவ்வாலியில் அமைத்தது தான் மெல்லிசை மன்னரின் திறமை.. ஒருவரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. 1959’ல் வெளியான ராஜா மலையசிம்மன் திரையில் கைதிகளை கப்பலில் மலேய நாட்டிற்கு கொண்டுபோவதாய் காட்சி. கைதிகள் எல்லோரும் கப்பலில் பல வேலைகள் செய்து பின் களைப்பு தீர அவர்கள் பாடும் பாடலை கவ்வாலி பாணியில் அமைத்திருப்பார் மன்னர் சீர்காழியார், பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஜி.கே.வெங்கடேஷ் பாடும் குதூகலமான பாடல் .. தபலா உருட்டலுடன் ஆரம்பிக்கும் தொகையறா மாளிகையிலே வசிக்கும் மனிதர்கள் எல்லோரும் வேளை தவறாமல் விலா வெடிக்கத் தின்றாலும் இந்த ஏழைகள் போல் நிம்மதியாய் இருக்க முடியாதே இருக்கும் பணத்தாலே ஒரு சுகமும் கிடையாதே திருடர் பயத்தாலே இமைகளும் மூடாதே கவ்வாலிக்கு உண்டான ஹார்மோனியம், நீண்ட ஆலாபணை , கைதட்டல் என குதூகலமாய் ஆரம்பிக்கும் பாடல் அண்ணாத்தே...ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம் இதுதான் கலிகாலம் இதுதான் கலிகாலம் இந்த வரியையே மூவரும் மூன்று விதமாய் பாடி பின் சேர்ந்து பாடுவது அழகு .. யாரேனும் அசந்தா கண்ணில் மண்ணைத் தூவி செய்யும் ஜகஜாலம் ஊளைச் சதை பிடிச்சி உப்பிப் பெருத்தவங்க நாளுக்கொரு வைத்தியரை நாடி அலையறாங்க நமக்கு ஊளைச் சதையுமில்லே வைத்தியர் உதவியும் தேவையில்லே கூழைக் குடிச்சாலும் நம்ம குஷிக்கு ஒரு குறைச்சலுமில்லே அண்ணாத்தே....நாளை நடக்கும் நடப்பைப் பற்றி கவலை நமக்கில்லை கவலை நமக்கில்லை கவலை நமக்கில்லை ஆளைக் கெடுக்கும் பணமும் இல்லே அதனால் பயமில்லே ஹார்மோனியமும் தபலாவும் விளையாடும் கோட்டை கட்டி வாழ்ந்தாலும் கொண்டாட்டம் போட்டாலும் தேட்டை போட்டு அடுத்தாரையே திண்டாடச் செய்தாலும் கூட்டுக் கிளியல்லவோ அந்தக் குடி கெடுப்போரெல்லோரும் நாங்க காட்டுப் பறவைகள் போல் இங்கே கவலையற்று வாழுகிறோம் கொசுவின் கானத்துக்கேற்றபடி தாளங்கூட போடுகிறோம் அண்ணாத்தே கூரை நமக்கு ஆகாசந்தான் பஞ்சணை தரையேதான் – சீமான்கள் யாரும் என்றும் காணா இன்பம் உண்டு நமேக்கேதான்..... மிகவும் அழகான ஒரு கவ்வாலி வகை பாடலை நாயகன் ரஞ்சனும்(என்ன மிடுக்கு என்ன கம்பீரம்) கைதிகளும் மாளிகை வாசிகளை கிண்டல் செய்து பாடும் விதமாய் அதுவ்ய்ன் 1959’ல் அமைந்தது புதுமையே மருதகாசியின் அழகான வரிகளும் அதை பாடகர்கள் பாடியிருக்கும் விதமும் இதெல்லாம் மன்னர் என்ற அந்த மகா புருஷருக்கு மட்டுமே சாத்தியம் பாடல் காட்சியை பதிவேற்றம் செய்துள்ளேன்.. முழு பாடல் கிடைக்கவில்லை. அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா

No comments:

Post a Comment