Wednesday, June 10, 2020
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 4
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 4
=========================
ஏற்கனவே பிரபல கவிஞர்கள் எழுதிய பாட்டுக்கு பலரும் இசையமைத்துள்ளார்கள்
பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் பாடல்கள் பல திரைப்படங்களில் குறிப்பாக ஏ.வி.எம் திரைப்படங்களில் 40’கள் முதலே இடம்பெற்றுள்ளன.
சுதர்சனம் மாஸ்டர், சி.ஆர்.சுப்புராமன் அவர்கள். ஜி.ராமனாதன் போன்றவர்கள் எல்லோருமே இது போல் பல பாடல்களுக்கு வடிவம் கொடுத்துள்ளனர்.
ஆனால் மெல்லிசை மன்னர் மட்டும் எப்படி வித்தியாசப்படுகிறார்
இன்றும் தமிழுக்கும் அமுதென்று பேர் பாடல் பிரபலமாய் இருப்பதற்கு காரணம் பாரதிதாசன் எப்படி அந்த பாடலை தன் மனதில் வடிவமைத்தாரோ அதே போல் மெட்டமைத்து அசத்தியதால்
அந்த ஏற்ற இறக்கம் கொண்ட தாளக்கட்டில் சுசீலாம்மாவின் குரலில் தமிழ் என்றுமே அமுது தானே ....
அப்படி இன்னொரு பாவேந்தர் பாரதிதாசன் பாடலுக்கு மெட்டமைக்கிறார் மெல்லிசை மாமன்னர்.
பாவேந்தர் பாரதிதாசன் எந்த உணர்வில் தமிழ் முழங்கினாரோ அதே உணர்வை இசையில் வடிவமைத்துள்ளார் மன்னர்
முதலில் தமிழ் முழங்குகிறது பின் தமிழர்களுக்கு யாராவது தீமை செய்தால் பொங்குவதாக பாவேந்தரின் உணர்வை ஒவ்வொரு
இசை அசைவிலும் கொண்டு வந்திருப்பார்
பாடலின் துவக்கமே கம்பீரமாக பாவேந்தரின் கவிதை புத்தகம் சுழல .. தமிழ் முழக்கத்துடன் ஆரம்பிக்கும்
பின் சங்கு முழங்கும் ஓசையுடன் தொடரும் சீர்காழியாரும் கம்பீர குரல் .. இந்த பாடலுக்கு சீர்காழ்யாரும் சுசீலாம்மாவும் என்ற தேர்விலேயே பாதி வெற்றி பாடலுக்கு
தொடரும் சங்கொலிக்கு பின் ஒரு தொடர் இசை வரும் பாருங்கள் அப்பப்பா குழுவினர் சங்கே முழங்கு என்று அந்த இசையோடு கலந்து பாட
அந்த புத்தகம் திறக்க அதிலிருந்து தமிழ் என்ற கன்னிப்பெண் சங்கோடு தோன்றுவதாக அபிநயசரஸ்வதி சரோஜாதேவி தோன்ற ..அதுவரை தமிழை ரசித்துக்கொண்டிருந்த மக்கள் திலகத்தின் முகம் அப்படியே .. கேள்விக்குறியாகும்..
அவர் நீலா நீலா என்று கத்தினாலும் மேடையில் அது கேட்குமா ..
சரோ புத்தகத்திலிருந்து வெளியே வந்த அந்த நொடியில் ஒலிக்கும் அந்த சங்கொலி தொடரும் அந்த இசைக்கதம்பம் .. எல்லோரையும் கட்டுவிக்கும் வித்தை .. எழுந்த புரட்சித்தலைவர் உட்பட
புத்தகம் மறைந்து ஒரு அருமையான வித்தியாசமான சரஸ்வதி சிலை ..ஒரு கையில் மயில் பீலி, மறு கை வீணையின் மேல்.. தாமரையில் அமர்ந்திருக்கும் கலைவாணி .. அப்பா ... மன்னர் இசையால் மிரட்டினால்
இயக்குனர் கே.சங்கர் பாடல் காட்சியை சிறப்பாக படம்பிடித்து மன்னரின் உழைப்பிற்கு மரியாதை செய்துள்ளார் என்றால் அது மிகையில்லை
தொடரிசையின் முடிவில் தேன் குரலாள் இசைப்பேரரசி சுசீலாம்மா ஆரம்பிப்பார் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
தமிழின் சிறப்பை உலகுக்கு பறைசாற்றும் விதமாக எழுச்சியாக ஆரம்பிப்பார் சுசீலாம்மா
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
தமிழர்களின் ஒற்றுமை கண்டு பகைவர் ஓடிவிட்டனர் என்று பாடி முடித்து
தமிழர்க்கு யாராவது தீங்கிழைத்தால் என்ன நடக்கும் தெரியுமா என்பது போல் தொடரும் வரிகளும் இசையும் மெய் சிலிர்க்கும்
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் .. அந்த நீண்ட ஆலாபணை
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு என தமிழர்க்கு தீங்கு உண்டாக்குபவர்களுக்க்கு என்ன நடக்கும் என்பதை சொல்லி முடிக்கும் விதமாக அந்த இசைக்கோர்வையும்
இதெல்லாம் இவருக்கு மட்டுமே சாத்தியம்..
இப்படி சொல்லிவிட்டு .. எங்கள் தமிழினம் எப்படிப்பட்டது தெரியுமா என்று எடுத்துரைக்கும் கட்டம் தொடரும் வரிகளும் இசையும்
திங்களொடும் செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும் (இந்த இடத்தில் அந்த உடுக்கை ஒலி ...)
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் ... இதை ஒட்டி ஒலிக்கும் தொடரிசை ..
குழுவினரின் உற்சாகம்.. பின் சுசீலாம்மா தொடருவார் “தமிழுடன் பிறந்தோம் நாங்கள்”
சீர்காழியார் தொடருவார். .. இங்கே ஆண்மை என்பது (ஆணாதிக்கம் அல்ல). தமிழையும் பெண்ணையும் காக்கும் தலைவன் ஆண் சிங்கத்திற்கு ஒப்பானவன் என்பதாக பொருள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கும் ஞாபகம் செய் முழங்கு சங்கே
முழங்கு சங்கே என்று அவர் முடித்தவுடன் தொடரும் சங்கொலியும் இசையும் அடேயப்பா ..
தொடர்ந்து பெருமைகளை அடுக்கிக்கொண்டே போவார் சீர்காழியார்
வென் கொடுமை சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள் வெற்றித் தோள்கள்
தொடரும் அவரது நீண்ட ஆலாபணை
கங்கையைப் போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம் என சீர்காழியார் பெருமையை சொல்லிக்கொண்டே வர .. மன்னர் இசையை அப்படியே ஒரு இடத்தில் நிறுத்தி
இப்பொழுது ஆண் பெண் இருவரும் சேர்ந்து பாடும் வரிகளாக
வெங்குருதி தனில் கமழ்ந்து வீரம் செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம் என்று இசையை அப்படியே உச்சத்தில் கொண்டுபோய்
தமிழ் எங்கள் மூச்சாம் என்று சீர்காழியாரின் குரலில் முடியும் பாடல்
அப்பா பாடல் முடிந்த பின்னும் அந்த தமிழன் என்ற உணர்வு அப்படியே நம்முள் நம்மையும் அறியாமல் ஆட்கொள்ளத்தானே செய்யும் .. அப்படிப்பட்ட ஒரு பாடல் அதற்கு அப்படிப்பட்ட ஒரு இசை வடிவம்
பாரதிதாசன் அவ்வளவு எளிதில் தன் பாடலை படத்தில் பயன்படுத்தவிட்டதில்லை . அதுவும் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் பாடலுக்கு இசையமைத்து அவரிடமே பாராட்டு வாங்கியவர் மெல்லிசை மாமன்னர்.
இந்த பாடல் ஒரு தமிழ் முழக்கம்.. அதற்கு நம் இசைச்சிங்கம் வழங்கியதோ ஒரு இசை முழக்கம்
அமானுஷ்யம் - தொடரும் - ராஜேஷ் லாவண்யா'

அமானுஷ்யம் - தொடரும் - ராஜேஷ் லாவண்யா
Subscribe to:
Post Comments (Atom)
புதுவை நகரின் பரட்சிகவியின் தமிழ் முழக்கத்திற்கு நம் இசைசிங்கம் வழங்கிய ஓர் இசைமுழக்கம் அமானுஷ்யமே ---என்றும் நினைவில் நிற்கும் காவியமே.
ReplyDeleteThank you
DeleteFrom chandraraghuraman
ReplyDelete