Wednesday, June 10, 2020

எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 3

எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 3
சினிமாவில் காதல் உணர்வு போன்றவை பெரும்பாலும் நாயகியருக்கு அதிகம் அப்படிப்பட்ட பாடல்களும் நாயகியருக்குத்தான் அதிகம் ... ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் ஆண்களுக்கும் இந்த மாதிரி பாடல்கள் வந்தாலும் இசையால் அந்த உணர்வுகளை விவரிப்பது என்பது அபூர்வம் வரிகளும் வார்த்தைகளும் மட்டுமே உணர்வுகளை சொல்லும் விதமாக இருக்கும் மெல்லிசை மன்னரோ இசையால் உணர்வுகளை சொல்வதில் வல்லவர்.. ஒவ்வொரு இசைக்கருவியும் ஒவ்வொரு உணர்வையும் அதுவே சொல்வதுபோல் இருக்கும் இங்கும் அப்படி ஒரு காட்சி.. அறிமுகம் இல்லாத இருவர் மழைக்காக ஒரு மரத்தின் கீழ் ஒதுங்க இடி என்றால் பெண்களுக்கு அப்படி என்ன பயமோ உடனே அவள் தன்னையும் அறியாமல் அவனை தழுவிக்கொள்கிறாள் பின் உணர்ந்து விலகி ஓடுகிறாள் அந்த ஒரு தொடுதல் .. தழுவல் அவன் மேல் மின்சாரத்தை பாய்ச்சியது போல் அவன் உணர்வதை இசையில் காண்பித்திருப்பார் மெல்லிசை சக்ரவர்த்தி அவனுள் ஏதோ மாற்றம் .. ஒரு புதுவெள்ளம் . அவன் கட்டவிழ்ந்த காளையாக . காட்டாற்று வெள்ளம் போல் அவன் மனது பரவசப்படுவதை ஆலாபனையில் வெளிப்படுத்தியிருக்கும் விதம் அபாரம் ஹஹா ஹொஹோ அஹா அஹாஹா ஹா... ஓ... ஒஹோ அஹா ஒஹோ அஹாஹா ஹா.. என துள்ளலுடன் ஆரம்பிக்கும் பாடல் பி.பி.ஸ்ரீனிவாஸ் செய்த ஜாலங்களை பின்னாட்களில் பாலுவை வைத்து செய்ய வைத்தார் மெல்லிசை மாமன்னர். அப்படி ஒரு பாடல் இது. அந்த இளவயது பாலுவின் குரலில் தான் என்ன ஒரு ஈர்ப்பு .. ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ இந்த வரி பாடும்போது பரவசம் (பாங்கோஸ் மற்றும் புல்லாங்குழல் அப்படியே அந்த பரவசத்தை சொல்லும்) பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சொர்க்கம் ஹா(இந்த ஹாவில் அப்படியே கிரக்கம்) எங்கே அந்த சொர்க்கம் .. குரல் இசை எல்லாமே துள்ள காதலுக்கு மன்னன் ஜெமினி மட்டும் என்ன சும்மாவா.. 50 வயது இருக்கும் இந்த படம் நடிக்கும் பொழுது. மனிதர் என்னமாய் துள்ளுகிறார்.. அடி தூள் மீண்டும் ஹஹா ஹொஹோ அஹா அஹாஹா ஹா... ஓ... ஒஹோ அஹா ஒஹோ அஹாஹா ஹா என அடங்காத பரவசம்.. ஏதோ ஒரு புது உலகத்தில் மிதப்பது போல் .. தொடரும் இடையிசை அப்பப்பா .. மனத்தின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் பூவை அள்ளித் தந்தாள் அந்த பூந்தென்றல் அன்னம் போதை கொண்டு ஆடும் எந்தன் மனம் என்னும் கின்னம் என் கண்ணோடு பெண்மை ஒரு கதை படித்தாளோ .. இந்த வரி சொல்லும் உணர்வை தொடரும் குழலும் பாடும் ஆஹா என்ன மனிதர் அவர் .. மெல்லிசை சக்ரவர்த்தி நான் காணாமல் நெஞ்சை அவள் படம் பிடித்தாளோ ( கவியரசர் அவர் பங்குக்கு வார்த்தைளை அள்ளி தெளித்திருக்கிறார்) ஆனந்தம் என்றாலும் சட்டென்று அது தொடருமா .. என சந்தேகமும் வரும் தானே . அது தானே மனித மனம்.. பார்த்தவளை மீண்டும் பார்போமா என்ற கவலை அது வரிகளாய் . இசையாய் மாற இதோ நாள் போக போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ எங்கே போகுமோ ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ தொடரும் இடையிசை அப்பப்பா .. இசை மழை ... இசையால் பிழிந்திருப்பார் ஆசை யாரை விட்டது .. பரவசத்தில் இருக்கும் அவன் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று தானே கேட்பான் .. மூடி வைத்த தட்டில் இன்று மோக சின்னங்கள் ஆடு தொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள் கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ - குழலும் அதை அப்படியே ஒப்பிக்கும் நான் சொல்லாத சொல்லில் அவள் சுகம் வளர்ந்தாளோ நாள் போக போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ எங்கே போகுமோ ஆண் ஒரு பெண்ணின் ஸ்பரிசம் பட்டவுடன் ஏற்படும் உணர்வுகளை இசையால் உணர்த்துவது என்பது எளிதல்ல இந்த பாடலில் ஆரம்பம் முதல் முடிவு வரை இசையால் ஜெமினியின் உணர்வுகளை பிரதிபலித்திருப்பார் மன்னர். அதற்கு கூடுதல் பலம் பாலுவின் குரல் .. கவியரசரின் வரிகளும் மிகவும் அழகு. இந்த மாதிரி எல்லாம் கூட இசையமைக்க முடியும் என்பதெல்லாம் மாமன்னருக்கு மட்டுமே சாத்தியம். அவர் செய்த ஜாலத்தை அழகாய் திரையில் படம்பிடித்த இயக்குனர் ஸ்ரீதரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும் அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா' எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 3 சினிமாவில் காதல் உணர்வு போன்றவை பெரும்பாலும் நாயகியருக்கு அதிகம் அப்படிப்பட்ட பாடல்களும் நாயகியருக்குத்தான் அதிகம் ... ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் ஆண்களுக்கும் இந்த மாதிரி பாடல்கள் வந்தாலும் இசையால் அந்த உணர்வுகளை விவரிப்பது என்பது அபூர்வம் வரிகளும் வார்த்தைகளும் மட்டுமே உணர்வுகளை சொல்லும் விதமாக இருக்கும் மெல்லிசை மன்னரோ இசையால் உணர்வுகளை சொல்வதில் வல்லவர்.. ஒவ்வொரு இசைக்கருவியும் ஒவ்வொரு உணர்வையும் அதுவே சொல்வதுபோல் இருக்கும் இங்கும் அப்படி ஒரு காட்சி.. அறிமுகம் இல்லாத இருவர் மழைக்காக ஒரு மரத்தின் கீழ் ஒதுங்க இடி என்றால் பெண்களுக்கு அப்படி என்ன பயமோ உடனே அவள் தன்னையும் அறியாமல் அவனை தழுவிக்கொள்கிறாள் பின் உணர்ந்து விலகி ஓடுகிறாள் அந்த ஒரு தொடுதல் .. தழுவல் அவன் மேல் மின்சாரத்தை பாய்ச்சியது போல் அவன் உணர்வதை இசையில் காண்பித்திருப்பார் மெல்லிசை சக்ரவர்த்தி அவனுள் ஏதோ மாற்றம் .. ஒரு புதுவெள்ளம் . அவன் கட்டவிழ்ந்த காளையாக . காட்டாற்று வெள்ளம் போல் அவன் மனது பரவசப்படுவதை ஆலாபனையில் வெளிப்படுத்தியிருக்கும் விதம் அபாரம் ஹஹா ஹொஹோ அஹா அஹாஹா ஹா... ஓ... ஒஹோ அஹா ஒஹோ அஹாஹா ஹா.. என துள்ளலுடன் ஆரம்பிக்கும் பாடல் பி.பி.ஸ்ரீனிவாஸ் செய்த ஜாலங்களை பின்னாட்களில் பாலுவை வைத்து செய்ய வைத்தார் மெல்லிசை மாமன்னர். அப்படி ஒரு பாடல் இது. அந்த இளவயது பாலுவின் குரலில் தான் என்ன ஒரு ஈர்ப்பு .. ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ இந்த வரி பாடும்போது பரவசம் (பாங்கோஸ் மற்றும் புல்லாங்குழல் அப்படியே அந்த பரவசத்தை சொல்லும்) பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சொர்க்கம் ஹா(இந்த ஹாவில் அப்படியே கிரக்கம்) எங்கே அந்த சொர்க்கம் .. குரல் இசை எல்லாமே துள்ள காதலுக்கு மன்னன் ஜெமினி மட்டும் என்ன சும்மாவா.. 50 வயது இருக்கும் இந்த படம் நடிக்கும் பொழுது. மனிதர் என்னமாய் துள்ளுகிறார்.. அடி தூள் மீண்டும் ஹஹா ஹொஹோ அஹா அஹாஹா ஹா... ஓ... ஒஹோ அஹா ஒஹோ அஹாஹா ஹா என அடங்காத பரவசம்.. ஏதோ ஒரு புது உலகத்தில் மிதப்பது போல் .. தொடரும் இடையிசை அப்பப்பா .. மனத்தின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் பூவை அள்ளித் தந்தாள் அந்த பூந்தென்றல் அன்னம் போதை கொண்டு ஆடும் எந்தன் மனம் என்னும் கின்னம் என் கண்ணோடு பெண்மை ஒரு கதை படித்தாளோ .. இந்த வரி சொல்லும் உணர்வை தொடரும் குழலும் பாடும் ஆஹா என்ன மனிதர் அவர் .. மெல்லிசை சக்ரவர்த்தி நான் காணாமல் நெஞ்சை அவள் படம் பிடித்தாளோ ( கவியரசர் அவர் பங்குக்கு வார்த்தைளை அள்ளி தெளித்திருக்கிறார்) ஆனந்தம் என்றாலும் சட்டென்று அது தொடருமா .. என சந்தேகமும் வரும் தானே . அது தானே மனித மனம்.. பார்த்தவளை மீண்டும் பார்போமா என்ற கவலை அது வரிகளாய் . இசையாய் மாற இதோ நாள் போக போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ எங்கே போகுமோ ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ தொடரும் இடையிசை அப்பப்பா .. இசை மழை ... இசையால் பிழிந்திருப்பார் ஆசை யாரை விட்டது .. பரவசத்தில் இருக்கும் அவன் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று தானே கேட்பான் .. மூடி வைத்த தட்டில் இன்று மோக சின்னங்கள் ஆடு தொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள் கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ - குழலும் அதை அப்படியே ஒப்பிக்கும் நான் சொல்லாத சொல்லில் அவள் சுகம் வளர்ந்தாளோ நாள் போக போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ எங்கே போகுமோ ஆண் ஒரு பெண்ணின் ஸ்பரிசம் பட்டவுடன் ஏற்படும் உணர்வுகளை இசையால் உணர்த்துவது என்பது எளிதல்ல இந்த பாடலில் ஆரம்பம் முதல் முடிவு வரை இசையால் ஜெமினியின் உணர்வுகளை பிரதிபலித்திருப்பார் மன்னர். அதற்கு கூடுதல் பலம் பாலுவின் குரல் .. கவியரசரின் வரிகளும் மிகவும் அழகு. இந்த மாதிரி எல்லாம் கூட இசையமைக்க முடியும் என்பதெல்லாம் மாமன்னருக்கு மட்டுமே சாத்தியம். அவர் செய்த ஜாலத்தை அழகாய் திரையில் படம்பிடித்த இயக்குனர் ஸ்ரீதரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும் அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா

No comments:

Post a Comment