Wednesday, June 10, 2020
எம்.எஸ்.வி என்னும் அமானுஷ்யம்-1.
எம்.எஸ்.வி என்னும் அமானுஷ்யம்-1..
அமானுஷ்யம் என்றால் என்ன . நினைத்துக்கூட பார்க்க முடியாதவை என்றும் பொருள் கொள்ளலாம்.. அப்படிப்பட்டவர் தான் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி அவர்கள்
அவருக்கு முன்னோடிகள் பல இருந்தாலும் ஒரே மாதிரி அமைதியாய் ஓடிக்கொண்டிருந்த இசை என்னும் ஆற்றை பல வடிவங்களில் அருவியாக, பெருக்கெடுத்த வெள்ளமாக, அமைதியான நதியாக, கடும் புயலுடன் கரை புரண்டு ஓடும் காட்டற்று வெள்ளமாக இசையை மாற்றிய பெருமை இவருக்கு மட்டுமே சேரும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசுகையில் சொன்னது போல் பறவைகளின் ஒலி, இரயில் வண்டியின் ஓட்டம், தென்னை மரங்களின் கீற்று உரசல் சத்தம், கதவை மெல்ல திறக்கும் சத்தம் .. அவ்வளவு ஏன் குறட்டை சத்தம் இதையெல்லாம் இசையில் காட்டி மக்களை வியப்பில் ஆழ்த்தியவர் எம்.எஸ்.வி
தனக்கு தானே ஞானிகள் என்றும் தென்றல் என்றும் புயல் என்றும் பட்டங்கள் சூட்டிக்கொள்ளும் இசைக்கலைஞர்களுக்கு மத்தியில் பட்டம் பக்கமே தலை வைக்காமல் பாட்டு பாட்டு பாட்டு பக்கமே தலையை மட்டுமல்ல சர்வத்தையும் வைத்தவர் இந்த இசை மாமேதை ..
நான் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த மனிதனின் மூளையை நினைத்துப்பார்ப்பேன்.. இவ்வளவு ஞானமும் ஆற்றலும் எங்கிருந்து வந்திருக்கும் என்று அப்புறம் தான் நினைவுக்கு வந்தது அடர்ந்த காடுகளில் இருக்கும் தானே முளைத்த மரங்கள் தான் மனிதன் நட்ட மரத்தைவிட உறுதியானவை என்று அப்படி இவரும் ஒரு சுயம்பு தான் .. ஏன் சொல்கிறேன் என்றால் அதற்கு முன் மேலை நாடுகளில் மிகவும் பிரபலமாக இருந்த ventriloquism அதாவது வேறோர் இடத்தில் இருந்து குரல் வருவது போல் பேசுவது. இதை ஒரு பொழுதுபோக்காகவே மேலை நாடுகளில் பயன்படுத்தினார்கள். பின்னர் ஆழ்ந்த ஆராய்ச்சியில் தெரியவந்தது என்னவென்றால் நம்மால் செய்ய முடியத விஷயங்களையோ மன எண்ணங்களையோ கையில் உள்ள ஒரு பொம்மையின் மூலம் சொல்ல வைப்பது ... அதாவது மனிதன் தன் பலவீனத்தை இந்த பொம்மையை கொண்டு போக்க முயற்ச்சிக்கிறான்.. இதுவும் ஒரு வகை நடிப்பை சேர்ந்தது ..
இப்படி ஒரு காட்சியை சினிமாவில் கொண்டு வர வேறு யாரால் முடியும். என்னை கவர்ந்த இயக்குனர்களின் பட்டியலில் சிம்மாசனம் போட்டு கம்பீரமாக வீற்றிருக்கும் எங்கள் கே.பி. ஆம் கே.பாலச்சந்தருக்கு மட்டுமே சாத்தியம். அவரும் ஒரு அமானுஷ்யம் தான்..
அவர் ஒரு காட்சியை வைக்கிறார். அந்த ஆண் அவளை விரும்புகிறான் ஆனால் சொல்ல முடியவில்லை .. காரணம் அவள் ஏற்கனவே வாழ்க்கையில் அடிபட்டவள் கைக்குழந்தையுடன் இருப்பவள் ..
இப்படி ஒரு சூழலில் திரையுலக வித்தகர் பாடலை கேட்க அங்கே எம்.எஸ்.வி என்ற இசை அமானுஷ்யம் விஸ்வரூபம் எடுக்கிறது ..
கதைப்படி அவன் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு இரு குரல்களில் பேசுபவன்
அதை அப்படியே பாடலில் வடிவமைத்திருப்பார் மன்னர்
அடேயப்பா
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் பாடல் தான் அது ..
அவனுக்கு அழகாய் அடக்கமாய் பாலுவின் குரல் ( அதாவது எதற்கு இந்த முயற்ச்சி .. திருமணத்திற்கு 2 மனம் வேண்டும் உன் எண்ணங்கள் எல்லாம் வீண் என்பது போல)
அதையே பொம்மையாக சதன் பாடும்போது . இல்லை எனக்கு அவள் மேல் அன்பு காதல் உள்ளது .. என்பது போல் மறைபொருளாய் காதலை சொல்வது என்பதாய் அந்த ventriloquism என்பதை எவ்வளவு நயமாய் பயன்படுத்தியிருக்கிறார்.
இதெல்லாம் அந்த காலகட்டத்தில் புரட்டிப்போட்ட பாடல் என்றல் மிகையில்லை.
கவியரசர் சளைத்தவரா ........
அந்த பெண் கணவனால் கைவிடப்பட்டு இப்பொழுது காதலன் மீண்டும் வாழ்வில் வந்த வேளையில் கணவனும் வந்து சேர .,
இந்த பொம்மை விளையாட்டை கவியரசர் எவ்வளவு அழகாக கையாளுகிறார்..
அந்த பெண்ணை இரு ஆண்களின் கையில் பொம்மை என்று சொல்லி சபாஷ் பெருகிறார்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
கரையினில் ஆடும் நாணலே நீ
நாணல்? மீ? ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ
கரையினில் ஆடும் நாணலே நீ
நதியினில் சொந்தம் தேடுகின்றாய்
அவன் கரையில் ஆடும் நாணல்
இப்பொழுது பொம்மையின் மூலம் தன் எண்ணத்தை வெளியிடுதல்
சிற்பம் ஒன்று சிரிக்கக்கண்டு
ரப்பர் பொம்மை ஏக்கம் கொண்டு
சின்னப்பையன் மனசும் கொஞ்சம்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப்பார்த்தால் ஒன்றாய்ச் சேராதோ
எவ்வளவு நாசூக்காக ஒட்டிப்பார்த்தால் ஒன்றாய் சேராதோ ........................
மீண்டும் அவன்
கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
பொம்மை என்பதால் நகைச்சுவையுடன் பேசுவது மரபு அதனால் இந்த வரி ..
பாஸ் இட் இஸ் அபூர்வ ராகம்?
கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
வயலுக்குத்தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ
வயலுக்குத்தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ
என்று அவன் தனது காதல் நிறைவேறாது என்று சொன்னாலும்
பொம்மையாக முயர்ச்சிக்கிறான்
பாட்டைக்கண்டு ராகம் போட்டேன்
நீரைக்கண்டு தாகம் கொண்டேன்
பாவம் கீவம் பார்க்கக்கூடாது
உடனே அவன் -நோ இட்ஸ் பேட்…(no its bad)
பொம்மை - பட் ஐயாம் மேட் (but i'm mad)
பாவப்பட்ட ஜென்மம் ஒன்று
ஊமைக்கேள்வி கேட்கும் போது
ஆசை மோசம் செய்யக்கூடாது
இது எதுவுமே புரியாமல் அவன் தன்னிடம் பொம்மையை வைத்து வித்தை காட்டுகிறான் என்று அவள் சிரித்துக்கொண்டே இருப்பாள் (குரல் ரமோலா)
இதில் சிறப்பே அந்த மூன்றாம் சரணத்தில் தான்
அவன் மனதில் சோகம் , பொம்மை மூலம் கேள்வி இருந்தாலும் கடைசியின் அவன் நிஜ உருவம் வெளியே எட்டிப்பார்க்கத்தானே செய்யும் .. பொம்மையும் அழுது பாடலை முடிக்கிறது
சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
பொம்மை - பாஸ்! லவ் ஹாஸ் நோ சீஸன்! ஆர் ஈவன் ரீஸன்!
அவன் ஷட் உப்!
சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்
பொம்மையும் உடைகிறது இங்கே
======================================
அடைஞ்சவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தவனுக்கு ஏப்ரல் மாசம்
அடியேன் முடிவைச் சொல்லக்கூடாதோ
அவன் - இட்ஸ் ஹைலி இடியாட்டிக்!
பொம்மை - நோ பாஸ்! ஒன்லி ரொமாண்டிக்!
கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு
குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு
முடிவைச் சொல்லி சிரிக்கக்கூடாதோ
முடிவைச் சொல்லி சிரிக்கக்கூடாதோ (இந்த வரி பாடும்போது பொம்மைக்குள் இருக்கும் அவன் அழுவான்)
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன்…மயங்குகிறாய்
அப்பப்பா எப்பேற்பட்ட ஒரு கலைப்படைப்பு
இரு மேதைகள் கே.பி மற்றும் மெல்லிசை மாமன்னர் உருவாக்கிய அமானுஷ்யம் அதற்கு மேலும் அழகூட்டியவர் கவியரசர்
வேறென்ன சொல்ல பாடலை கேட்டு மகிழுங்கள்
Labels:
M.S.Viswanathan
Subscribe to:
Post Comments (Atom)
There cannot be a better explanation for this song . Rajesh has gone into the soul of KB ayya and got it as is where is and shared it with us for our benefit .
ReplyDeletethank you so much
DeleteYou have
ReplyDeleteDescribed exceedingly well -- on the scene conception, music creation , and picturisation which have been aptly handled
Sooooooper writeup rajeshji
Thank you chandra ji
DeleteFrom chandra R
ReplyDeleteI always like the Song Idhu Kuzhandhai PAAdum Thaalaattu in Oru Thalai Raagam. Before the arrival of Oru Thalai Raagam, the sing which beautifully expressed that one sude love is this Junior Junior Song. No doubt about it. Well elaborated Mr Rajesh
ReplyDelete