Wednesday, June 10, 2020
எம்.எஸ்.வி என்னும் அமானுஷ்யம் - 2
எம்.எஸ்.வி என்னும் அமானுஷ்யம் - 2
இன்று இசையில் அதை செய்தேன் இதை செய்தேன் .. என்று மார்தட்டிக்கொள்பவர்கள் நிறைய ..
அவர்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடும் ஊடகங்களும் ஏராளம்..
ஆனால் சத்தமில்லாமல் பல இமாலய சாதனைகளை செய்துவிட்டு போனவர் மெல்லிசை மாமன்னர்.
என்னுள்ளில் எம்.எஸ்.வி என்ற ஒரு நிகழ்ச்சியில் 100% உண்மை பேசியது அங்கு வந்திருந்த ரஜினி அவர்கள் .. அவர் சொன்னது போல் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தியிருந்தும் எளிமையாக அடக்கத்தின் மறு உருவமாக இருந்துவிட்டு போனவர் மெல்லிசை மாமன்னர்.
சில வருடங்களுக்கு முன் மரகதமணி என்ற கீரவாணி அவர்கள் வசந்த் அவர்களின் இயக்கத்தில் வந்த நீ பாதி நான் பாதி திரையில் வாலி எழுதி பாலு பாடிய நிவேதா என்ற பாடல் மிகவும் பிரபலம் . எல்லோரும் பாரட்டினார்கள் ஒரு பெயரும் சில ஸ்வரங்களும் மட்டுமே ஒலிக்கும் பாடல் புதுமையான முயற்ச்சி என்று.
ஆனால் அதெல்லாம் என்றோ செய்து காட்டிவிட்டார் மெல்லிசை மாமன்னர்.
நினைத்தாலே இனிக்கும் திரையில் பாடல் முழுவதும் ஹம்மிங், இசை மற்றும் இரண்டே வார்த்தைகள் “நினைத்தாலே இனிக்கும்” இவை மட்டுமே வைத்து ஒரு இசை புரட்சியே நடத்தியிருப்பார் மன்னர்.
இயக்குனர் சிகரம் இப்படி ஒரு சூழலை அதுவும் இருவர் பார்த்துக்கொள்வது.. அவர்கள் நினைவு மட்டும் பேசிக்கொள்வதாக ஒரு காட்சியை உருவாக்கிய அந்த மேதை கே.பி. இந்த நூற்றாண்டில் நமக்கு கிடைத்த இயக்குனர் மேதை அவர்.
அவர் அப்படி ஒரு சூழல் கொடுக்க இன்னொரு மேதை அதைவிட ஒரு படி மேலே போய் நினைத்தாலே இனிக்கும் என்ற 2 வரிகள் மட்டுமே வைத்து முழுக்க முழுக்க ஒரு பாடலை இசைப்பெட்டகமாக உருவாக்குகிறார்.. ஹம்மிங் அதுவும் வளைத்து வளைத்து .. இசைக்கருவிகள் ஓடுவது போல் குரலில் ஹம்மிங் .. பின் நினைத்தாலே இனிக்கும்.. இடையிசை மீண்டும் ஹம்மிங்..
அதுவும் இடையே வரும் நீண்ட பாலுவின் ஹம்மிங் அடேயப்பா
பாலுவும் ஜானகியும் மிகவும் அழகாக இசைந்து பாடியிருக்க இந்த பாடலில் சத்தமில்லாமல் சாதித்து இருக்கும் மன்னரை இந்த இசையுலகம் கொண்டாடியதா என்றால் இல்லை ..
அவர் செய்த பல பாடல்களையும் மெட்டுக்களையும் லேசாக மாற்றி தங்கள் பாடல்கள் என்று வெளியிட்ட எத்தனையோ இசையமைப்பாளர்களின் பெயர் பட்டியலை சொன்னால் அவர்க்ளின் பெயருக்கு களங்கம்..
இரண்டே இரண்டு வார்த்தைகளை வைத்து ஒரு இசைத்தோரணம் அமைத்த இந்த மாபெரும் கலைஞன் ஒரு அமானுஷ்யம் என்றால் அது மிகையில்லை.
மீண்டும் வருவேன் - ராஜேஷ் லாவண்யா(rajesh lavanya)'

மீண்டும் வருவேன் - ராஜேஷ் லாவண்யா(rajesh lavanya)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment