Wednesday, June 10, 2020
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 4
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 4
=========================
ஏற்கனவே பிரபல கவிஞர்கள் எழுதிய பாட்டுக்கு பலரும் இசையமைத்துள்ளார்கள்
பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் பாடல்கள் பல திரைப்படங்களில் குறிப்பாக ஏ.வி.எம் திரைப்படங்களில் 40’கள் முதலே இடம்பெற்றுள்ளன.
சுதர்சனம் மாஸ்டர், சி.ஆர்.சுப்புராமன் அவர்கள். ஜி.ராமனாதன் போன்றவர்கள் எல்லோருமே இது போல் பல பாடல்களுக்கு வடிவம் கொடுத்துள்ளனர்.
ஆனால் மெல்லிசை மன்னர் மட்டும் எப்படி வித்தியாசப்படுகிறார்
இன்றும் தமிழுக்கும் அமுதென்று பேர் பாடல் பிரபலமாய் இருப்பதற்கு காரணம் பாரதிதாசன் எப்படி அந்த பாடலை தன் மனதில் வடிவமைத்தாரோ அதே போல் மெட்டமைத்து அசத்தியதால்
அந்த ஏற்ற இறக்கம் கொண்ட தாளக்கட்டில் சுசீலாம்மாவின் குரலில் தமிழ் என்றுமே அமுது தானே ....
அப்படி இன்னொரு பாவேந்தர் பாரதிதாசன் பாடலுக்கு மெட்டமைக்கிறார் மெல்லிசை மாமன்னர்.
பாவேந்தர் பாரதிதாசன் எந்த உணர்வில் தமிழ் முழங்கினாரோ அதே உணர்வை இசையில் வடிவமைத்துள்ளார் மன்னர்
முதலில் தமிழ் முழங்குகிறது பின் தமிழர்களுக்கு யாராவது தீமை செய்தால் பொங்குவதாக பாவேந்தரின் உணர்வை ஒவ்வொரு
இசை அசைவிலும் கொண்டு வந்திருப்பார்
பாடலின் துவக்கமே கம்பீரமாக பாவேந்தரின் கவிதை புத்தகம் சுழல .. தமிழ் முழக்கத்துடன் ஆரம்பிக்கும்
பின் சங்கு முழங்கும் ஓசையுடன் தொடரும் சீர்காழியாரும் கம்பீர குரல் .. இந்த பாடலுக்கு சீர்காழ்யாரும் சுசீலாம்மாவும் என்ற தேர்விலேயே பாதி வெற்றி பாடலுக்கு
தொடரும் சங்கொலிக்கு பின் ஒரு தொடர் இசை வரும் பாருங்கள் அப்பப்பா குழுவினர் சங்கே முழங்கு என்று அந்த இசையோடு கலந்து பாட
அந்த புத்தகம் திறக்க அதிலிருந்து தமிழ் என்ற கன்னிப்பெண் சங்கோடு தோன்றுவதாக அபிநயசரஸ்வதி சரோஜாதேவி தோன்ற ..அதுவரை தமிழை ரசித்துக்கொண்டிருந்த மக்கள் திலகத்தின் முகம் அப்படியே .. கேள்விக்குறியாகும்..
அவர் நீலா நீலா என்று கத்தினாலும் மேடையில் அது கேட்குமா ..
சரோ புத்தகத்திலிருந்து வெளியே வந்த அந்த நொடியில் ஒலிக்கும் அந்த சங்கொலி தொடரும் அந்த இசைக்கதம்பம் .. எல்லோரையும் கட்டுவிக்கும் வித்தை .. எழுந்த புரட்சித்தலைவர் உட்பட
புத்தகம் மறைந்து ஒரு அருமையான வித்தியாசமான சரஸ்வதி சிலை ..ஒரு கையில் மயில் பீலி, மறு கை வீணையின் மேல்.. தாமரையில் அமர்ந்திருக்கும் கலைவாணி .. அப்பா ... மன்னர் இசையால் மிரட்டினால்
இயக்குனர் கே.சங்கர் பாடல் காட்சியை சிறப்பாக படம்பிடித்து மன்னரின் உழைப்பிற்கு மரியாதை செய்துள்ளார் என்றால் அது மிகையில்லை
தொடரிசையின் முடிவில் தேன் குரலாள் இசைப்பேரரசி சுசீலாம்மா ஆரம்பிப்பார் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
தமிழின் சிறப்பை உலகுக்கு பறைசாற்றும் விதமாக எழுச்சியாக ஆரம்பிப்பார் சுசீலாம்மா
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
தமிழர்களின் ஒற்றுமை கண்டு பகைவர் ஓடிவிட்டனர் என்று பாடி முடித்து
தமிழர்க்கு யாராவது தீங்கிழைத்தால் என்ன நடக்கும் தெரியுமா என்பது போல் தொடரும் வரிகளும் இசையும் மெய் சிலிர்க்கும்
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் .. அந்த நீண்ட ஆலாபணை
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு என தமிழர்க்கு தீங்கு உண்டாக்குபவர்களுக்க்கு என்ன நடக்கும் என்பதை சொல்லி முடிக்கும் விதமாக அந்த இசைக்கோர்வையும்
இதெல்லாம் இவருக்கு மட்டுமே சாத்தியம்..
இப்படி சொல்லிவிட்டு .. எங்கள் தமிழினம் எப்படிப்பட்டது தெரியுமா என்று எடுத்துரைக்கும் கட்டம் தொடரும் வரிகளும் இசையும்
திங்களொடும் செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும் (இந்த இடத்தில் அந்த உடுக்கை ஒலி ...)
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் ... இதை ஒட்டி ஒலிக்கும் தொடரிசை ..
குழுவினரின் உற்சாகம்.. பின் சுசீலாம்மா தொடருவார் “தமிழுடன் பிறந்தோம் நாங்கள்”
சீர்காழியார் தொடருவார். .. இங்கே ஆண்மை என்பது (ஆணாதிக்கம் அல்ல). தமிழையும் பெண்ணையும் காக்கும் தலைவன் ஆண் சிங்கத்திற்கு ஒப்பானவன் என்பதாக பொருள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கும் ஞாபகம் செய் முழங்கு சங்கே
முழங்கு சங்கே என்று அவர் முடித்தவுடன் தொடரும் சங்கொலியும் இசையும் அடேயப்பா ..
தொடர்ந்து பெருமைகளை அடுக்கிக்கொண்டே போவார் சீர்காழியார்
வென் கொடுமை சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள் வெற்றித் தோள்கள்
தொடரும் அவரது நீண்ட ஆலாபணை
கங்கையைப் போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம் என சீர்காழியார் பெருமையை சொல்லிக்கொண்டே வர .. மன்னர் இசையை அப்படியே ஒரு இடத்தில் நிறுத்தி
இப்பொழுது ஆண் பெண் இருவரும் சேர்ந்து பாடும் வரிகளாக
வெங்குருதி தனில் கமழ்ந்து வீரம் செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம் என்று இசையை அப்படியே உச்சத்தில் கொண்டுபோய்
தமிழ் எங்கள் மூச்சாம் என்று சீர்காழியாரின் குரலில் முடியும் பாடல்
அப்பா பாடல் முடிந்த பின்னும் அந்த தமிழன் என்ற உணர்வு அப்படியே நம்முள் நம்மையும் அறியாமல் ஆட்கொள்ளத்தானே செய்யும் .. அப்படிப்பட்ட ஒரு பாடல் அதற்கு அப்படிப்பட்ட ஒரு இசை வடிவம்
பாரதிதாசன் அவ்வளவு எளிதில் தன் பாடலை படத்தில் பயன்படுத்தவிட்டதில்லை . அதுவும் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் பாடலுக்கு இசையமைத்து அவரிடமே பாராட்டு வாங்கியவர் மெல்லிசை மாமன்னர்.
இந்த பாடல் ஒரு தமிழ் முழக்கம்.. அதற்கு நம் இசைச்சிங்கம் வழங்கியதோ ஒரு இசை முழக்கம்
அமானுஷ்யம் - தொடரும் - ராஜேஷ் லாவண்யா'

அமானுஷ்யம் - தொடரும் - ராஜேஷ் லாவண்யா
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 3
எம்.எஸ்.வி ஒரு அமானுஷ்யம் - 3
சினிமாவில் காதல் உணர்வு போன்றவை பெரும்பாலும் நாயகியருக்கு அதிகம்
அப்படிப்பட்ட பாடல்களும் நாயகியருக்குத்தான் அதிகம் ...
ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் ஆண்களுக்கும் இந்த மாதிரி பாடல்கள் வந்தாலும் இசையால் அந்த உணர்வுகளை விவரிப்பது என்பது அபூர்வம்
வரிகளும் வார்த்தைகளும் மட்டுமே உணர்வுகளை சொல்லும் விதமாக இருக்கும்
மெல்லிசை மன்னரோ இசையால் உணர்வுகளை சொல்வதில் வல்லவர்.. ஒவ்வொரு இசைக்கருவியும் ஒவ்வொரு உணர்வையும் அதுவே சொல்வதுபோல் இருக்கும்
இங்கும் அப்படி ஒரு காட்சி..
அறிமுகம் இல்லாத இருவர் மழைக்காக ஒரு மரத்தின் கீழ் ஒதுங்க இடி என்றால் பெண்களுக்கு அப்படி என்ன பயமோ உடனே அவள் தன்னையும் அறியாமல் அவனை தழுவிக்கொள்கிறாள்
பின் உணர்ந்து விலகி ஓடுகிறாள்
அந்த ஒரு தொடுதல் .. தழுவல் அவன் மேல் மின்சாரத்தை பாய்ச்சியது போல் அவன் உணர்வதை இசையில் காண்பித்திருப்பார் மெல்லிசை சக்ரவர்த்தி
அவனுள் ஏதோ மாற்றம் .. ஒரு புதுவெள்ளம் . அவன் கட்டவிழ்ந்த காளையாக . காட்டாற்று வெள்ளம் போல் அவன் மனது பரவசப்படுவதை ஆலாபனையில் வெளிப்படுத்தியிருக்கும் விதம் அபாரம்
ஹஹா ஹொஹோ அஹா அஹாஹா ஹா... ஓ... ஒஹோ அஹா ஒஹோ அஹாஹா ஹா.. என துள்ளலுடன் ஆரம்பிக்கும் பாடல்
பி.பி.ஸ்ரீனிவாஸ் செய்த ஜாலங்களை பின்னாட்களில் பாலுவை வைத்து செய்ய வைத்தார் மெல்லிசை மாமன்னர். அப்படி ஒரு பாடல் இது.
அந்த இளவயது பாலுவின் குரலில் தான் என்ன ஒரு ஈர்ப்பு ..
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
காணுது மனது ஓஹோ
இந்த வரி பாடும்போது பரவசம் (பாங்கோஸ் மற்றும் புல்லாங்குழல் அப்படியே அந்த பரவசத்தை சொல்லும்)
பெண்ணை தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்க்கம் ஹா(இந்த ஹாவில் அப்படியே கிரக்கம்)
எங்கே அந்த சொர்க்கம் ..
குரல் இசை எல்லாமே துள்ள காதலுக்கு மன்னன் ஜெமினி மட்டும் என்ன சும்மாவா.. 50 வயது இருக்கும் இந்த படம் நடிக்கும் பொழுது. மனிதர் என்னமாய் துள்ளுகிறார்.. அடி தூள்
மீண்டும் ஹஹா ஹொஹோ அஹா அஹாஹா ஹா... ஓ... ஒஹோ அஹா ஒஹோ அஹாஹா ஹா என அடங்காத பரவசம்..
ஏதோ ஒரு புது உலகத்தில் மிதப்பது போல் ..
தொடரும் இடையிசை அப்பப்பா .. மனத்தின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும்
பூவை அள்ளித் தந்தாள் அந்த பூந்தென்றல் அன்னம்
போதை கொண்டு ஆடும் எந்தன் மனம் என்னும் கின்னம்
என் கண்ணோடு பெண்மை ஒரு கதை படித்தாளோ .. இந்த வரி சொல்லும் உணர்வை தொடரும் குழலும் பாடும் ஆஹா என்ன மனிதர் அவர் .. மெல்லிசை சக்ரவர்த்தி
நான் காணாமல் நெஞ்சை அவள் படம் பிடித்தாளோ ( கவியரசர் அவர் பங்குக்கு வார்த்தைளை அள்ளி தெளித்திருக்கிறார்)
ஆனந்தம் என்றாலும் சட்டென்று அது தொடருமா .. என சந்தேகமும் வரும் தானே . அது தானே மனித மனம்..
பார்த்தவளை மீண்டும் பார்போமா என்ற கவலை
அது வரிகளாய் . இசையாய் மாற இதோ
நாள் போக போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ எங்கே போகுமோ
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
காணுது மனது ஓஹோ
தொடரும் இடையிசை அப்பப்பா .. இசை மழை ... இசையால் பிழிந்திருப்பார்
ஆசை யாரை விட்டது .. பரவசத்தில் இருக்கும் அவன் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று தானே கேட்பான் ..
மூடி வைத்த தட்டில் இன்று மோக சின்னங்கள்
ஆடு தொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்
கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ - குழலும் அதை அப்படியே ஒப்பிக்கும்
நான் சொல்லாத சொல்லில் அவள் சுகம் வளர்ந்தாளோ

ஆண் ஒரு பெண்ணின் ஸ்பரிசம் பட்டவுடன் ஏற்படும் உணர்வுகளை இசையால் உணர்த்துவது என்பது எளிதல்ல இந்த பாடலில் ஆரம்பம் முதல்
முடிவு வரை இசையால் ஜெமினியின் உணர்வுகளை பிரதிபலித்திருப்பார் மன்னர். அதற்கு கூடுதல் பலம் பாலுவின் குரல் ..
கவியரசரின் வரிகளும் மிகவும் அழகு.
இந்த மாதிரி எல்லாம் கூட இசையமைக்க முடியும் என்பதெல்லாம் மாமன்னருக்கு மட்டுமே சாத்தியம்.
அவர் செய்த ஜாலத்தை அழகாய் திரையில் படம்பிடித்த இயக்குனர் ஸ்ரீதரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்
அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா'

அமானுஷ்யம் தொடரும் - ராஜேஷ் லாவண்யா
எம்.எஸ்.வி என்னும் அமானுஷ்யம் - 2
எம்.எஸ்.வி என்னும் அமானுஷ்யம் - 2
இன்று இசையில் அதை செய்தேன் இதை செய்தேன் .. என்று மார்தட்டிக்கொள்பவர்கள் நிறைய ..
அவர்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடும் ஊடகங்களும் ஏராளம்..
ஆனால் சத்தமில்லாமல் பல இமாலய சாதனைகளை செய்துவிட்டு போனவர் மெல்லிசை மாமன்னர்.
என்னுள்ளில் எம்.எஸ்.வி என்ற ஒரு நிகழ்ச்சியில் 100% உண்மை பேசியது அங்கு வந்திருந்த ரஜினி அவர்கள் .. அவர் சொன்னது போல் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தியிருந்தும் எளிமையாக அடக்கத்தின் மறு உருவமாக இருந்துவிட்டு போனவர் மெல்லிசை மாமன்னர்.
சில வருடங்களுக்கு முன் மரகதமணி என்ற கீரவாணி அவர்கள் வசந்த் அவர்களின் இயக்கத்தில் வந்த நீ பாதி நான் பாதி திரையில் வாலி எழுதி பாலு பாடிய நிவேதா என்ற பாடல் மிகவும் பிரபலம் . எல்லோரும் பாரட்டினார்கள் ஒரு பெயரும் சில ஸ்வரங்களும் மட்டுமே ஒலிக்கும் பாடல் புதுமையான முயற்ச்சி என்று.
ஆனால் அதெல்லாம் என்றோ செய்து காட்டிவிட்டார் மெல்லிசை மாமன்னர்.
நினைத்தாலே இனிக்கும் திரையில் பாடல் முழுவதும் ஹம்மிங், இசை மற்றும் இரண்டே வார்த்தைகள் “நினைத்தாலே இனிக்கும்” இவை மட்டுமே வைத்து ஒரு இசை புரட்சியே நடத்தியிருப்பார் மன்னர்.
இயக்குனர் சிகரம் இப்படி ஒரு சூழலை அதுவும் இருவர் பார்த்துக்கொள்வது.. அவர்கள் நினைவு மட்டும் பேசிக்கொள்வதாக ஒரு காட்சியை உருவாக்கிய அந்த மேதை கே.பி. இந்த நூற்றாண்டில் நமக்கு கிடைத்த இயக்குனர் மேதை அவர்.
அவர் அப்படி ஒரு சூழல் கொடுக்க இன்னொரு மேதை அதைவிட ஒரு படி மேலே போய் நினைத்தாலே இனிக்கும் என்ற 2 வரிகள் மட்டுமே வைத்து முழுக்க முழுக்க ஒரு பாடலை இசைப்பெட்டகமாக உருவாக்குகிறார்.. ஹம்மிங் அதுவும் வளைத்து வளைத்து .. இசைக்கருவிகள் ஓடுவது போல் குரலில் ஹம்மிங் .. பின் நினைத்தாலே இனிக்கும்.. இடையிசை மீண்டும் ஹம்மிங்..
அதுவும் இடையே வரும் நீண்ட பாலுவின் ஹம்மிங் அடேயப்பா
பாலுவும் ஜானகியும் மிகவும் அழகாக இசைந்து பாடியிருக்க இந்த பாடலில் சத்தமில்லாமல் சாதித்து இருக்கும் மன்னரை இந்த இசையுலகம் கொண்டாடியதா என்றால் இல்லை ..
அவர் செய்த பல பாடல்களையும் மெட்டுக்களையும் லேசாக மாற்றி தங்கள் பாடல்கள் என்று வெளியிட்ட எத்தனையோ இசையமைப்பாளர்களின் பெயர் பட்டியலை சொன்னால் அவர்க்ளின் பெயருக்கு களங்கம்..
இரண்டே இரண்டு வார்த்தைகளை வைத்து ஒரு இசைத்தோரணம் அமைத்த இந்த மாபெரும் கலைஞன் ஒரு அமானுஷ்யம் என்றால் அது மிகையில்லை.
மீண்டும் வருவேன் - ராஜேஷ் லாவண்யா(rajesh lavanya)'

மீண்டும் வருவேன் - ராஜேஷ் லாவண்யா(rajesh lavanya)
எம்.எஸ்.வி என்னும் அமானுஷ்யம்-1.
எம்.எஸ்.வி என்னும் அமானுஷ்யம்-1..
அமானுஷ்யம் என்றால் என்ன . நினைத்துக்கூட பார்க்க முடியாதவை என்றும் பொருள் கொள்ளலாம்.. அப்படிப்பட்டவர் தான் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி அவர்கள்
அவருக்கு முன்னோடிகள் பல இருந்தாலும் ஒரே மாதிரி அமைதியாய் ஓடிக்கொண்டிருந்த இசை என்னும் ஆற்றை பல வடிவங்களில் அருவியாக, பெருக்கெடுத்த வெள்ளமாக, அமைதியான நதியாக, கடும் புயலுடன் கரை புரண்டு ஓடும் காட்டற்று வெள்ளமாக இசையை மாற்றிய பெருமை இவருக்கு மட்டுமே சேரும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசுகையில் சொன்னது போல் பறவைகளின் ஒலி, இரயில் வண்டியின் ஓட்டம், தென்னை மரங்களின் கீற்று உரசல் சத்தம், கதவை மெல்ல திறக்கும் சத்தம் .. அவ்வளவு ஏன் குறட்டை சத்தம் இதையெல்லாம் இசையில் காட்டி மக்களை வியப்பில் ஆழ்த்தியவர் எம்.எஸ்.வி
தனக்கு தானே ஞானிகள் என்றும் தென்றல் என்றும் புயல் என்றும் பட்டங்கள் சூட்டிக்கொள்ளும் இசைக்கலைஞர்களுக்கு மத்தியில் பட்டம் பக்கமே தலை வைக்காமல் பாட்டு பாட்டு பாட்டு பக்கமே தலையை மட்டுமல்ல சர்வத்தையும் வைத்தவர் இந்த இசை மாமேதை ..
நான் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த மனிதனின் மூளையை நினைத்துப்பார்ப்பேன்.. இவ்வளவு ஞானமும் ஆற்றலும் எங்கிருந்து வந்திருக்கும் என்று அப்புறம் தான் நினைவுக்கு வந்தது அடர்ந்த காடுகளில் இருக்கும் தானே முளைத்த மரங்கள் தான் மனிதன் நட்ட மரத்தைவிட உறுதியானவை என்று அப்படி இவரும் ஒரு சுயம்பு தான் .. ஏன் சொல்கிறேன் என்றால் அதற்கு முன் மேலை நாடுகளில் மிகவும் பிரபலமாக இருந்த ventriloquism அதாவது வேறோர் இடத்தில் இருந்து குரல் வருவது போல் பேசுவது. இதை ஒரு பொழுதுபோக்காகவே மேலை நாடுகளில் பயன்படுத்தினார்கள். பின்னர் ஆழ்ந்த ஆராய்ச்சியில் தெரியவந்தது என்னவென்றால் நம்மால் செய்ய முடியத விஷயங்களையோ மன எண்ணங்களையோ கையில் உள்ள ஒரு பொம்மையின் மூலம் சொல்ல வைப்பது ... அதாவது மனிதன் தன் பலவீனத்தை இந்த பொம்மையை கொண்டு போக்க முயற்ச்சிக்கிறான்.. இதுவும் ஒரு வகை நடிப்பை சேர்ந்தது ..
இப்படி ஒரு காட்சியை சினிமாவில் கொண்டு வர வேறு யாரால் முடியும். என்னை கவர்ந்த இயக்குனர்களின் பட்டியலில் சிம்மாசனம் போட்டு கம்பீரமாக வீற்றிருக்கும் எங்கள் கே.பி. ஆம் கே.பாலச்சந்தருக்கு மட்டுமே சாத்தியம். அவரும் ஒரு அமானுஷ்யம் தான்..
அவர் ஒரு காட்சியை வைக்கிறார். அந்த ஆண் அவளை விரும்புகிறான் ஆனால் சொல்ல முடியவில்லை .. காரணம் அவள் ஏற்கனவே வாழ்க்கையில் அடிபட்டவள் கைக்குழந்தையுடன் இருப்பவள் ..
இப்படி ஒரு சூழலில் திரையுலக வித்தகர் பாடலை கேட்க அங்கே எம்.எஸ்.வி என்ற இசை அமானுஷ்யம் விஸ்வரூபம் எடுக்கிறது ..
கதைப்படி அவன் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு இரு குரல்களில் பேசுபவன்
அதை அப்படியே பாடலில் வடிவமைத்திருப்பார் மன்னர்
அடேயப்பா
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் பாடல் தான் அது ..
அவனுக்கு அழகாய் அடக்கமாய் பாலுவின் குரல் ( அதாவது எதற்கு இந்த முயற்ச்சி .. திருமணத்திற்கு 2 மனம் வேண்டும் உன் எண்ணங்கள் எல்லாம் வீண் என்பது போல)
அதையே பொம்மையாக சதன் பாடும்போது . இல்லை எனக்கு அவள் மேல் அன்பு காதல் உள்ளது .. என்பது போல் மறைபொருளாய் காதலை சொல்வது என்பதாய் அந்த ventriloquism என்பதை எவ்வளவு நயமாய் பயன்படுத்தியிருக்கிறார்.
இதெல்லாம் அந்த காலகட்டத்தில் புரட்டிப்போட்ட பாடல் என்றல் மிகையில்லை.
கவியரசர் சளைத்தவரா ........
அந்த பெண் கணவனால் கைவிடப்பட்டு இப்பொழுது காதலன் மீண்டும் வாழ்வில் வந்த வேளையில் கணவனும் வந்து சேர .,
இந்த பொம்மை விளையாட்டை கவியரசர் எவ்வளவு அழகாக கையாளுகிறார்..
அந்த பெண்ணை இரு ஆண்களின் கையில் பொம்மை என்று சொல்லி சபாஷ் பெருகிறார்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
கரையினில் ஆடும் நாணலே நீ
நாணல்? மீ? ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ
கரையினில் ஆடும் நாணலே நீ
நதியினில் சொந்தம் தேடுகின்றாய்
அவன் கரையில் ஆடும் நாணல்
இப்பொழுது பொம்மையின் மூலம் தன் எண்ணத்தை வெளியிடுதல்
சிற்பம் ஒன்று சிரிக்கக்கண்டு
ரப்பர் பொம்மை ஏக்கம் கொண்டு
சின்னப்பையன் மனசும் கொஞ்சம்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப்பார்த்தால் ஒன்றாய்ச் சேராதோ
எவ்வளவு நாசூக்காக ஒட்டிப்பார்த்தால் ஒன்றாய் சேராதோ ........................
மீண்டும் அவன்
கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
பொம்மை என்பதால் நகைச்சுவையுடன் பேசுவது மரபு அதனால் இந்த வரி ..
பாஸ் இட் இஸ் அபூர்வ ராகம்?
கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
வயலுக்குத்தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ
வயலுக்குத்தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ
என்று அவன் தனது காதல் நிறைவேறாது என்று சொன்னாலும்
பொம்மையாக முயர்ச்சிக்கிறான்
பாட்டைக்கண்டு ராகம் போட்டேன்
நீரைக்கண்டு தாகம் கொண்டேன்
பாவம் கீவம் பார்க்கக்கூடாது
உடனே அவன் -நோ இட்ஸ் பேட்…(no its bad)
பொம்மை - பட் ஐயாம் மேட் (but i'm mad)
பாவப்பட்ட ஜென்மம் ஒன்று
ஊமைக்கேள்வி கேட்கும் போது
ஆசை மோசம் செய்யக்கூடாது
இது எதுவுமே புரியாமல் அவன் தன்னிடம் பொம்மையை வைத்து வித்தை காட்டுகிறான் என்று அவள் சிரித்துக்கொண்டே இருப்பாள் (குரல் ரமோலா)
இதில் சிறப்பே அந்த மூன்றாம் சரணத்தில் தான்
அவன் மனதில் சோகம் , பொம்மை மூலம் கேள்வி இருந்தாலும் கடைசியின் அவன் நிஜ உருவம் வெளியே எட்டிப்பார்க்கத்தானே செய்யும் .. பொம்மையும் அழுது பாடலை முடிக்கிறது
சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
பொம்மை - பாஸ்! லவ் ஹாஸ் நோ சீஸன்! ஆர் ஈவன் ரீஸன்!
அவன் ஷட் உப்!
சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்
பொம்மையும் உடைகிறது இங்கே
======================================
அடைஞ்சவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தவனுக்கு ஏப்ரல் மாசம்
அடியேன் முடிவைச் சொல்லக்கூடாதோ
அவன் - இட்ஸ் ஹைலி இடியாட்டிக்!
பொம்மை - நோ பாஸ்! ஒன்லி ரொமாண்டிக்!
கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு
குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு
முடிவைச் சொல்லி சிரிக்கக்கூடாதோ
முடிவைச் சொல்லி சிரிக்கக்கூடாதோ (இந்த வரி பாடும்போது பொம்மைக்குள் இருக்கும் அவன் அழுவான்)
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன்…மயங்குகிறாய்
அப்பப்பா எப்பேற்பட்ட ஒரு கலைப்படைப்பு
இரு மேதைகள் கே.பி மற்றும் மெல்லிசை மாமன்னர் உருவாக்கிய அமானுஷ்யம் அதற்கு மேலும் அழகூட்டியவர் கவியரசர்
வேறென்ன சொல்ல பாடலை கேட்டு மகிழுங்கள்
Subscribe to:
Posts (Atom)