Monday, May 22, 2023
தேவாவும் கிராமியமும்
தேனிசைத் தென்றல் தேவா
தேவாவும் கிராமியமும்
அந்தக்கால வேதா அவர்களும் தனக்கு விருப்பமில்லாமல் பல ஹிந்தி மெட்டுக்களை தமிழில் கொடுத்தார்
இந்த தேவா பல பாடல்களை சுட்டுக்கொடுத்தார் என்ற பலர் சொன்னாலும் தேவா என்ற இந்த இனிய எளிய தன்னடக்கமான மனிதரும் பல
இனிய பாடல்களை தந்துள்ளார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது.
பலரும் அவரது கானா பாடல்களுக்கு மயங்கியுள்ளனர், பலரும் அவரது மெலோடி பாடல்களுக்கு மயங்கியிருப்பர்
ஆனால் நான் அவரது கிராமிய மனம் கமழும் பாடல்களுக்கு அடிமை என்றே சொல்வேன்..
ராஜா அவர்கள் குறைவான படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்த காலம், ரகுமான் என்ற புயல் வீச துவங்கியிருந்த காலம்
தேவா அவர்கள் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் மிகவும் அருமையான கிராமிய மனம் கமழும் பாடல்களை அள்ளி வழங்கினார்.
ஒரு தயாரிப்பாளர் தேவாவின் மெட்டை பிடிக்கவில்லை என்று சொல்ல அங்கு பாடல் எழுத வந்த வாலி ஐயா “ஆரம்பம் நல்லாயிருக்கு வயலெல்லாம் நல்லாருக்கு” என்று எழுதி தேவாவின் வாழ்க்கைக்கு விளக்கேத்தி வைத்தவர் வாலி ஐயா
சந்திரபோஸ் தேவா ஜோடியாக குழு நடத்தி பின் தேவா பொதிகையில் வேலைபார்த்து போஸ் திரையில் ஜொலிக்க துவங்கி பின்னர் தான் தேவா அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இருந்தாலும் 90’களின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார் என்றால் அது மிகையில்லை
தேவா இசையமைத்து வெளிவந்த முதல் படம் மாட்டுக்கார மன்னாரு அதிலும் ஏழிசை வேந்தர் டி,எம்.எஸ் பாரும் அழ்கான கிராமிய மெட்டு காவேரி கரை ஓரம் ஒரு கன்னி வந்தா ..
தேவாவின் அடையாளமாக வந்த படம் ராம ராஜனின் மனசுக்கேத்த மகராசா .. அதிலும் அருமையான கிராமிய மனம் கமழும் பாடலாய் அமைந்த ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே .. சுசீலாம்மாவும் பாலுவும் அசத்திய பாடல்
அடுத்து முரளி கெளதமி நடிப்பில் வந்த நம்ம ஊரு பூவாத்தா திரையில் பழைய கிராமிய பாடலின் சாயலில் வந்த ஆவாரம்பூவு ஒண்ணு நாரோடு .. சித்ரா யேசுதாஸ் குரலில் கிராமிய சோகம்
அன்பாலயா பிரபாகரன் அவர்களின் தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து வந்த படம் வைகாசி பொறந்தாச்சு.. பிரசாந்த் நாயகனாக அறிமுகம் ஆகிய படம் ..
இன்று தர்பார் பாடல் எந்த சாயலில் உள்ளதோ அதன் மூலம் கேலி கிண்டலை கிராமிய மெட்டில் தேவா பட்டி தொட்டியெங்கும் ஒலிக்க வைத்த “தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா” பாடல்.. அன்றைய இளைஞர்களின் தேசிய கீதமாய் ஒலித்த பாடல்
மண்ணுக்கேத்த மைந்தன் திரையில் ஓடுகிர வண்டி ஓட ஒற்றுமையா ரெண்டு மாடு பாடல் காயல் சேக்முகமது பாடியது .. பழைய மாட்டு வண்டி பாடல்களின் சாயலில் ரொம்பவும் அழகாகவே போட்டிருப்பார் ..
மணிவண்ணனின் புதுமனிதன் தேவாவிற்கு பேர் சொன்ன ஒரு படம் அதில் சித்ரா பாடிய ஏலேலங்குயிலே அடி ஏலேலங்குயிலே பாடல் பிரபலம். அதே படத்தில் யேசுதாஸ் பாடிய கிராமிய மனம் கமழும் சோகப்பாடல் வலைக்கு தப்பிய மீனு பாடல் நல்ல பாடல்
மரிக்கொழுந்து ரமேஷ் அர்விந்த் ஐஸ்வர்யா நடிப்பில் தேவாவின் பாடல்களும் ஹிட்டானவை .. குறிப்பாக கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு பாடல் மிகவும் பிரபலம். அதிலும் சித்ரா குரலில் பூங்குயில் நித்தம் கூவுற சத்தம் பாடல் அழகிய கிராமிய மெட்டு
தேவாவிற்கு ஒரு தனி அடையாளம் தந்த படம் என்றால் அது கஸ்தூரி ராஜாவின் ஆத்தா உன் கோவிலிலே .. அதில் எல்லா பாடல்களுமே அருமையாய் அமைத்திருப்பார் தேவா (எனக்கு மிகவும் பிடித்தவை சின்னஞ்சிறு பூவே). அதில் ஒலித்த அழகான கிராமிய மெட்டு
“ஒத்தையடி பாதையிலே ஊரு சனம் தூங்கையிலே” ஜிக்கியம்மாவும் பாலுவும் பாடிய பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடல்
மாங்கல்யம் தந்துனானே திரையில் மனோ சித்ரா பாடிய “காட்டு வழி பாதையில கண்டெடுத்த ஆணிமுத்து நான் புடிச்ச மாமன் மவன் தான்” மிகவும் அழகான கிராமிய மெட்டு எனக்கு நிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கேட்காதவர்கள்
கட்டாயம் கேளுங்கள்
அடுத்து தேவாவிற்கு பேர் சொன்ன படம் பவித்ரனின் “வசந்தகால பறவை” அதில் செம்பருத்தி செம்பருத்தி பாடல் மிகவும் பிரபலம்.. அதிலும் ஒரு இனிய கிராமிய மெட்டில் அவர் அமைத்த பாடல் தைமாசம் பங்குனி போயி சித்திரை மாசம் .. பழைய பாடலில் சாயலில் இருந்தாலும்
நல்ல மெட்டு
சின்னதம்பிக்கு அடுத்து பி.வாசு இயக்கிய படம் “கிழ்க்கு கரை” படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றிப்பாடல்கள் ....... குறிப்பாக எனக்கென பிறந்தவ ரெக்ககட்டி பறந்தவ இவ தான் மிகவும் பிரபலம்
இதே படத்தில் சிலு சிலுவென காத்து, சன்னதி வாசலில் வந்தது பூந்தேரு பாடல்கள் கிராமிய மெட்டை எளியமையாக்கி கொடுத்திருப்பார் தேவா ..
ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் வந்த ஒயிலாட்டம் திரையில் நல்ல கிராமிய மெட்டுக்களை தந்தார் தேவா - தெப்ப குளத்துக்குள்ள தினம் பார்த்து சிரிச்ச மச்சான் என்ற பாடல் நல்ல அழகான பாடல்
வி.எம்.சி ஹனீபா அவர்கள் இயக்கத்தில் வந்த வாசலில் ஒரு வெண்ணிலா (ராஜா மகள் பாடல் மிகவும் பிரபலம் பலரும் இது ராஜாவின் பாடல் என்றே நினைத்ததுண்டு). இதே படத்தில் யேசுதாஸ் குரலில் “என் ஊரு மதுர பக்கம்” கிராமிய மெட்டைத்தழுவி
வந்த பாடல்
வைதேகி வந்தாச்சு படத்திலும் சில நல்ல கிராமிய மெட்டுக்களை தந்தார் தேவா. இதில் மெல்லிசை மன்னரின் குரலில் ஒரு பாடல் மிகவும் அருமையாக இருக்கும்.
தூதுபோ செல்லக்ளியே படத்திலும் நல்ல பாடல்களை தந்தார் தேவா .. குறிப்பாக பாலு சித்ரா பாடிய ஏனோ எனை அழைக்கலானாய் தெருக்கூஉத்து பாடலை காதல் பாடலாக்கி அழகூட்டியிருப்பார் தேவா அவர்கள். இதே திரையில்
ஸ்வர்ணலதா பாடிய adam tease நல்ல கிராமிய மெட்டு
வெளிவராத நாடோடிக் காதல் திரையில் கூட நல்ல கிராமிய மெட்டுக்கள் தந்தார் தேவா .”மாலை கருக்கல் வந்து” க்ரிஷ்ணராஜ் சித்ரா குரல்களில் நல்ல பாடல்
மணிவாசத்திற்கு தொடர்ந்து இசையமைத்தார் தேவா .. அப்படி ஒரு படல் பெரிய கவுண்டர் பொண்ணு அதிலும் பாடலகள் நல்ல ரகம் . இருந்தும் அந்த ஒரு பேர் ஒரு சூப்பர் ஹிட் இன்னும் வராமல் இருந்தது தேவாவிற்கு
முரளி நடிப்பில் வெளிவந்த தங்கராசு திரையில் ஒலித்த பூங்காற்றே தினமும் தேடுறேன்.. மிகவும் அருமையான பாடல். வானொலியிலும் அடிக்கடி ஒலித்த பாடல் (பாலு சித்ரா சந்தோஷமாகவும், ஸ்வர்ணலதா சோகமாகவும் இசைக்கும் கீதம்)
தேவாவிற்கு சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் மணிவண்ணனின் “தெற்குத் தெரு மச்சான்". "தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே" சூப்பர் ஹிட்டாக அமைந்த பாடல். நல்ல கிராமிய மனம் கமழும் பாடல். இதே திரையில்
தெற்குத் தெரு மச்சானே பாடலும் மிகவும் பிரபலம்
பிரசாந்த் மோகினி நடிப்பில் வந்த உனக்காக பிறந்தேன் திரையில் “பெண் வேணும் ஒரு பெண் வேணும் “ எனக்கு மிகவும் பிடித்த பாடல் .. இன்றளவும் என் மனதிற்கு இனிய பாடல்.
அதே போல் கே.பாக்யரஜின் அம்மா வந்தாச்சு பாடல்களும் அமர்க்களமே .. குறிப்பக நந்தினி நந்தினி பாடல் (மனோ, ஸ்வர்ணலதா) குரலில் மிகவும் பிரபலம்.. இது உனக்காக பாடும் ராகம் பாலு, சுசீலாம்மா, சித்ரா குரல்களில் ஒரு வித்தியாசமான பாடல்
இருந்தாலும் தேவாவிற்கு ஏறுமுகமாய் அமைந்த படம் கே.பாலசந்தரின் தயாரிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த “அண்ணாமலை” எல்லா பாடல்களும் கலக்கிய படம்
அண்ணாமலை அண்ணாமலை , வந்தேண்டா பால்காரன் பாடல்கள் எல்லாம் நல்ல கிராமிய மனம் கமழும் பாடல்களே
பட்டத்து ராணி( விஜயகுமாருக்கு ஜோடி கெளதமி ஹி ஹி ) , பொண்டாட்டி ராஜ்ஜியம், கோட்டை வாசல் என நல்ல பாடலகள் கொடுத்து வந்தாலும் ஒரு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது பவித்ரனியின் இயக்கத்தில் சரத்குமார்,ரோஜா நடிப்பில்
வந்த “சூரியன்” அதில் எல்லாமே ஹிட் பாடல்கள் என்றால் கிராமிய மெட்டில் மனோரமா ஆச்சி நடத்தும் அந்த சீமந்த பாடல் “கொட்டுங்கடி கும்மி” ரொம்ப அழகான பாடல் ..
தொடர்ச்சியாக சரத்குமார் கனகா நடிப்பில் சாமுண்டி படத்தின் பாடல்கள் அன்றைய காலத்தில் மிகவும் ஹிட்டான பாடல்கள் .. முத்து நகையே முழு நிலவே , கண்ணுல பால ஊத்த எல்லாமே ரொம்ப அழகான பாடலகள்
குறிப்பாக வாலியின் வரிகளில் முத்து நகையே மிகவும் பிரபலம்.. அதிலும் கிராமிய மனம் கமழும் பாடல்களாய் இருந்தாலும் பாலு குரலில் ”மண்ணத் தொட்டு கும்பிட்டுட்டு” பாடல் அழகான கிராமிய மெட்டு.
இப்படியே தேவா அவர்களின் 50’வது படமாக வந்தது கஸ்தூரி ராஜாவின் “சோலையம்மா”.படம் முழுக்க கிராமிய மெட்டுக்கள் தான். "கூவுற குயிலு சேவல பார்த்து “ குழலிசையில் மிரட்டியிருப்பார் தேவா ..
அதே படத்தில் தாமிரபரணி ஆறு பாடல் மிகவும் அழகான கிராமிய மெட்டு
மஞ்ச தண்ணி ஊத்து மாமன் மேல, மேற்குத் தொடர்ச்சி மல உச்சியில எல்லாமே மிகவும் அருமையான பாடல்கள்
தொடர்ந்து வேடன், மதுமதி என நல்ல பாடலகள் .. குறிப்பாக மதுமதியில் மிகவும் சிறப்பாக “ஓ ஓ மதுபாலா” பாடல் மிகவும் பிரபலம். அதே படத்தில் கிராமிய மெட்டில் வலை வீசம்மா வலை வீசு வாலிப நெஞ்சில் வல வீசு துள்ளலான பாடல்.
விஜயகாந்த 2 வேடங்களில் நடித்த ராஜதுரையிலும் நல்ல பாடலகளை கொடுத்தவர் தேவா .. (ஜெயசுதா, பானுப்ரியா) .. ஒரு சந்தன மேனியில் மிகவும் இனிமையான பாடல் . அதே படத்தில் ஒரு அழகான கிராமிய மெட்டு ஊசி மலக்காடு
தொடர்ச்சியாக பல படங்கள் பேண்ட்மாஸ்டர், பாஸ்மார்க், தங்க பாப்பா ... பிரபு குஷ்பு நடிப்பில் வந்த மறவன் படப்பாடலக்ள் எல்லாமே ஹிட் குறிப்பாக சந்திரன கூப்பிடுங்க, சிங்கார குயிலே .
அதில் குஷ்பு பாடும் பழைய கிராமிய பாடல் போல் அமைந்த “கொண்டையிலே பூ முடிஞ்சு” பாடலும் அருமை .
மணிவண்ணன் இயக்கத்தில் வந்த க்ரைம் த்ரில்லர் .. ரொம்பவே அழகாய் இயக்கியிருப்பார் மூன்றாவது கண்(மோனிஷா நடிப்பில்).. அதில் ரோட்டில் ஒரு கல்யாண கூட்டம் பாடும் விதமாய் அமைந்த அழகான பாடல் மலையாளம் மலையாளம் ..
அதே போல் மனோபாலாவின் அருமையான படம் கறுப்பு வெள்ளை படத்திற்கு அழகாய் இசையமைத்திருப்பார் தேவா (ஓ ஸ்வர்ணமுகி பாடல் எல்லாம் மிகவும் அழகான பாடல்)
1993’ல் சரத்குமார் நடிப்பில் வந்த கட்டபொம்மன் படம் தேவாவிற்கு இன்றும் பேர் சொல்லும் படம் “ப்ரியா ப்ரியா “ எல்லாம் பிரபலமான பாடல் . அதே படத்தில் சுசீலாம்மாவும் யேசுதாஸ் பாடிய “கூண்ட விட்டு ஒரு பறவ”
தொடர்ந்து செந்தூரபாண்டியில் “சின்ன சின்ன சேதி சொல்லி” அழகான கிராமிய மெட்டில் ஒலித்த பாடல்
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வந்த புருஷலட்சணம் தேவாவிற்கு நல்ல பெயர் கொடுத்த படம். 108 அம்மன் பெயர்களை கொண்டு வந்த பாடல் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதே படத்தில் செம்பட்டுப் பூவே, காக்கை சிறகினிலே
நல்ல பாடல்கள்
அரண்மனைக் காவலன்(கெட்டி மேளம் எப்போ), ராதிகாவும் சரத்குமாரும் காதலிக்க துவங்கிய படம் நம்ம அண்ணாச்சி அதிலும் ஒரு அழகான கிராமிய மெட்டில் ஒரு பாடல் “சேர சோழ பாண்டியரெல்லாம் மாமன் கிட்ட”
செவத்த பொண்ணு(சித்திரையில் திருமணம் சொப்பனத்தில் இரு மனம்) தாமரை(ஆட்டு மந்த ஓட்டி ரோட்டு)
என் ஆசை மச்சானில் “ஆசையில பாத்தி கட்டி மெட்டில் இவர் கொடுத்த ஆடியில சேதி சொல்லி , ராஜபாண்டி(அத்தி பழம் சிவப்பா ), ஜல்லிக்கட்டு காளை (தூக்கணாங்குருவி ரெண்டு )
கஸ்தூரி ராஜாவின் தாய் மனசு திரையில் (தூதுவளை இலை அரைச்சு .. மிகவும் அழகான கிராமிய பாடல்)
மஞ்சு விரட்டு (கண்ணு படும் கண்ணு படும் ... அழகான பாடல்) , மாமா உன் பேர இன்னொரு அழகான பாடல்
தேவாவை உச்சத்திற்கு கொண்டு போன படம் ரஜினிகாந்த் அவர்களின் “பாட்ஷா” இன்றும் ஆட்டோக்காரன் பாடல் ஒலிக்காத இடமில்லை .
தொடர்ந்து கங்கை கரைப்பாட்டு (ஒரு பிருந்தாவனத்தினில் நந்தகுமாரனின் குரலோசை அழகான பாடல்), திருமூர்த்தி(செங்குருவி செங்குருவி)
செல்லக்கண்ணு (வண்டியில மாமன் பொண்ணு மிகவும் அருமையான கிராமிய மெட்டு)
தமிழச்சி திரையில் சிந்து பாடிய கூச்சம் மிகுந்த பொண்ணு பாடல் நல்ல கிராமிய மனம் கமழும் பாடல்
புள்ள குட்டிக்காரன் திரையிலும் மெட்டி மெட்டி பாடல் நல்ல கிராமிய மெட்டு .. அதே படத்தில் உமாரமணன் அருண்மொழி பாடிய போதும் எடுத்த ஜென்மமே அருமையான பாடல் தேவாவின் அழகான மெட்டு
காந்தி பிறந்த மண் திரையில் பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க பாடலும் அழகான கிராமிய மெட்டு. அதே படத்தில் ஆலமரத்துல பாடலும் நல்ல கிராமிய மெட்டு.
கார்த்திக் பானுப்ரியா நடிப்பில் வெளிவந்த சக்ரவர்த்தி படம் ஓடவில்லை ஆனால் அதில் கவுண்டரின் காமெடி ட்ராக் மிகவும் பிரபலம். அதில் ஒலித்த வாழ்த்தோப்புக்குள்ள வாலிபத்து காத்தடிக்குது மனோ ஜானகி குரலில் நம்ம கலகலப்பான
கிராமிய மெட்டு
இளைய தளபதி விஜய் நடித்த விஷ்னு திரையில் சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா பாடல் கிராமியத்தை தழுவிய மெட்டு .. அருண்மொழி,சித்ரா குரல்களில்
சரத்குமாரின் நாடோடி மன்னன் திரையில் மானாமதுரையில என்னோட மாமன் குதிரையில பாடலும் நல்ல கிராமிய மனம் கமழும் பாடல்
1995’ல் அஜித் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த ஆசைக்கு இசையமைத்து அந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார். கொஞ்ச நாள் பொறு தலைவா பாடல் வாலியின் வரிகளில் மிகவும்
அழகான பாடல் காதலர்களின் தேசிய கீதமாய் அமைந்தது ... அதுவும் நாட்டுப்புற மெட்டை கொஞ்சம் மென்மையாக மாற்றியிருப்பார் தேவா ..
தாய்க்குலமே தாய்க்குலமே திரையில் நேப்பாள மலையோரம் பாடல் கிராமிய மனம் கமழும் மெட்டு
சீதனம் திரையில் ஒலித்த வந்தாளப்பா வந்தாளப்பா பாடலும் அழகான கிராமிய மெட்டு .
மண்ணைத் தொட்டு கும்பிடனும் திரையில் இரண்டு பெண்கள் பாடுவதாய் அமைந்த சீதையின் கைகள் தொட்ட (சித்ரா, ஸ்வர்ணலதா) வாலியின் பாடல் மிகவும் அழகான பாடல்.
1996’ல் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் வந்த பரம்பரை திரையிலும் தேவா ஜொலித்தார் . குறிப்பாக வயக்காடு மச்சினன் வயக்காடு கிராமிய மெட்டில் குதூகலமான பாடல்
1996’ல் அகத்தியனின் வான்மதியும் தேவாவிற்கு பெயர் சொன்ன படம் .. வைகரையில் வந்ததென்ன வான்மதி மிகவும் பிரபலமான பாடல். பிள்ளையார்பட்டி ஹீரோ பாடல் கிராமியமும் கானாவும் கலந்த மெட்டு
ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் சுகன்யா நடிப்பில் வந்த மகாபிரபு திரையிலும் தேவா ஜொலித்தார் (சொல்லவா சொல்லவா ஒரு காதல் காதை இதமான காதல் பாடல் வாலியின் வரிகளில்).
அதே படத்தில் பாட்டெடுட்த்தேன் பச்சைக்கிளியே பாடல் கிராமிய மெட்டில் அமைந்த பாடல்
அஜித் பிரசாந்த் இணைந்து நடித்த கல்லூரி வாசல் படத்திலும் தேவா ஜொலித்தார் (என் மனதை கொள்ளையடித்தவளே, வனக்கிளியே, லயோலா காலேஜ் என எல்லாம் ஹிட் பாடல்கள்)
கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் செல்வா சுகன்யா நடித்த “புதிய பராசக்தி” படத்தில் மலேசியா வாசுவும் சித்ராவும் பாடிய ஆத்தோரம் மல்லிகையே அழகான கிராமிய மெட்டு (ஆவாரம்பூவைத் தொட்டு பாடலின் சாயல்)
விஜய் நடிப்பில் வந்த மாண்புமிகு மாணவன் திரையில் விஜய் பாடிய திருத்தனி போனா கிராமியமும் மேற்கெத்திய இசையின் கலவையில் பிரபலமான பாடல்
அஜித் நடிப்பில் அகத்தியனுக்கு தேசிய விருது பெற்று தந்த படம் “காதல் கோட்டை” அதில் வெள்ளரிக்கா பிஞ்சு கிராமிய மனம் கலந்த பாடல் ( மெல்லிசை மன்னரின் வரதப்பா சாயல்) தேவாவிற்கு மிகப்பெரிய பேர் வாங்கி கொடுத்த படம் இது
பாரதிராஜாவுடன் முதல் முதலாய் இணைந்த படம் “தமிழ்ச்செல்வன்” அதில் ஆசை கேப்ப களிக்கு ஆச பாடல் அழகான கிராமிய மெட்டு ..
1993ல் அரவிந்த்ஸ்வாமி சுகன்யா நடிப்பில் வந்த தாலாட்டு படத்தை இயக்கிய டி.கே.ராஜேந்திரன் மீண்டும் 1996’ல் ஜெயராம் சுகன்யா நடிப்பில் இயக்கிய படம் பரிவட்டம். இதில் கோவைசரளா மணிவண்ணன் நகைச்சுவை மிகவும் பிரபலம்
இதில் குண்டூரு குண்டு மல்லி கொண்டையில வச்சுகிட்டு மிகவும் அழகான கிராமிய மனம் கமழும் பாடல்
1996ல் தேவாவிற்கு கிடைத்த பம்பர் லாட்டரி கமலின் அவ்வை சண்முகி .. மனுஷன் எல்லா பாடலகளுக்கும் மெனக்கிட்டிருப்பார்.. எல்லாமே அருமையான பாடல்கள்
தொடர்ந்து கோகுலத்தில் சீதை என அமர்க்களமாக ஜொலித்தார் தேவா ..
அடுத்து இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் படமான கல்கிக்கு இசையமைக்கும் வாய்ப்பு (என்ன அருமையான பாடல்கள் .. ) அதிலும் ஒரு கிராமிய மெட்டை தழுவி ஒரு பாடல் செய்திருப்பார்
பூமிப்பொண்ணு சூரியன சுத்துதே சுத்துதே .... அருமை .. மற்றபடி சிங்கப்பூர் சேல , எழுதுகிறேன், பூவே நீ ஆடவா,
சீமான் அவர்களின் இயக்கத்தில் வந்த முதல் படம் “பாஞ்சாலங்குறிச்சி” அதில் தேவா அவர்களின் கிராமிய மெட்டுக்கள் எல்லாமே அருமையானவை . ஆத்தோரம் தோப்புக்குள்ள, உன் உதட்டோர செவப்பே,
பாரதிராஜாவின் குழுவில் இருந்த ரத்னகுமார் தனியாக இயக்கிய சேனாதிபதி சத்யராஜ் சுகன்யா நடிப்பில் மூணு முழம் மல்லியப்பூ என்னை முட்ட கண்ணால் பாக்குதடி மிகவும் அழகான கிராமிய மெட்டு
அதே படத்தில் என் இதயத்தை திருடிவிட்டாய் ஒரு வித்தியாசமான பாடல்
தர்மசக்கரம் திரையில் ஒரு அழகான பாடல் “மாமர அணிலே மாமர அணிலே”
சித்ரா லெட்சுமணன் இயக்கத்தில் பிரபு நடித்த பெரிய தம்பி படத்தில் ஸ்வர்ணலதா பாடிய வெள்ளிகிழமை சாயங்காலம் விரலத் தொட்டாண்டி என்ற பாடலும் நல்ல கிராமிய பாடல்.
சேரனின் முதல் படமான பாரதி கண்ணம்மா படத்தின் வெற்றிக்கு தேவாவின் இசையும் ஒரு காரணம் .. அதில் தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு அழகான கிராமிய மெட்டு
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நெப்போலியன் ஊர்வசி குஷ்பு நடிப்பில் வந்த எட்டுப்பட்டி ராசா திரையில் தேவா கிராமிய மெட்டுகளில் ராஜாங்கம் நடத்தினார்.. குறிப்பாக பஞ்சு மிட்டாய் சேல கட்டி . ஜானகியுடன் மலேசிய வாசு கலக்கிய பாடல்
தேவாவின் கலக்கல் மெட்டு
பி.வாசுவின் வாய்மையே வெல்லும் திரையில் குயில் பாட்டு பாடலும் அழகான கிராமிய மனம் வீசும் பாடல்
ராஜ்கபூர் இயக்கத்தில் சத்யராஜ் மீனா நடிப்பில் வந்த வள்ளல் நல்ல படம் . அதிலும் தேவாவின் பாடல்கள் அழகு குறிப்பாக வெத்தல வெத்தல, புளியம்பட்டி(மனோரமாவின் குரலில்) கிராமிய மனம் வீசும் பாடல்கள்
வி.சேகர் இயக்கத்தில் பொங்கலோ பொங்கலில் அப்பனுக்கு பாடம் சொன்ன அதுவும் நல்ல கிராமிய மனம் கமழும் பாடல்.
வசந்த் இயக்கத்தில் விஜய் சூர்யா நடிப்பில் நேருக்கு நேர் தேவாவிற்கு புகழ் சேர்த்த படம்
பி.வாசு இயக்கத்தில் ஜெயராம் குஷ்பு நடித்த பத்தினி திரையில் ஆலப்புழை அழகா அச்சன்கோயில் ஆணழகா நல்ல கிராமிய மனம் வீசும் காதல் பாடல்
இந்த கட்டுரை தேவாவின் கிராமிய மனம் கமழும் பாடலக்ள் குறித்து தான்..
சுரேஷ்கிருஷ்ணாவின் இயக்கத்தில் மிகவும் அழகான ஒரு படமாய் அமைந்த “ஆஹா” எல்லாமே அருமையான பாடல்கள் அதில் கூட கோழி வந்ததா பாடல் மெல்லிய கிராமிய மெட்டில் அமைந்த பாடல்
சேரனின் மிகப்பெரிய வெற்றிப்படமான “பொற்காலம்” அதிலும் தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல் மிகப்பெரிய வெற்றி ஈட்டிய கிராமிய மெட்டு .. குயவர்களின் உழைப்பை மிக அழகாய் சொல்லும் பாடல்
பாக்யராஜ் இயக்கி நக்மாவுடன் நடித்த வேட்டிய மடிச்சு கட்டு படத்தில் வைகை வெள்ளம் குளிப்பாட்டும் தமிழ் பாட்டு மலேசியா, கிருஷ்ணராஜ் குரல்களில் அழகான நாட்டுப்புற மெட்டு
விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்த நினைத்தேன் வந்தாய் படத்திற்கு தேவாவின் இசையும் முக்கிய காரணம்
பொண்ணு விளையிற பூமி திரையில் ஸ்வர்ணலதா பாடிய பாட்டு கட்டும் குயிலு நான் பச்ச வண்ண மயிலு பாடல் கிராமிய மனம் வீசும் ..
சீமானின் 2’வது படமான இனியவளே படத்தில் பாடலாசிரியையாக தாமரை அறிமுகம் “தென்றல் எந்தன் நடையை” மிகவும் அழகான பாடல்
இதே படத்தில் அன்னக்கிளி வண்ணக்கிளி கிருஷ்ணராஜ் குரலில் கிராமிய மனம் கமழும் பாடல்
கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் நடிகர் திலகம் ராதிகா முரளி ரோஜா சுவலெட்சுமி எல்லோரும் நடித்த என் ஆசை ராசாவே .. இதில் பாவம் நடிகர் திலகத்தை பாடாய் படுத்தியிருப்பார் கஸ்தூரி ராஜா
நான் இந்த படத்தின் பாடல்களை மிகவும் ரசிப்பேன் .. தேவா அவர்களின் அருமையான மெட்டுக்கள் ,
முரளி ரோஜா பாடும் மாமரக்குயிலே மாமரக்குயிலே( பாலு,ஸ்வர்ணலதா) மிகவும் அழகான கிராமிய காதல்
வண்டிக்கட்டி போகும்போது 2 பெண்கள் பாடுவதாக வரும் சோளக்காட்டு பாதையில மிகவும் அழகான பாடல் .. எசப்பாட்டு சாயலில் அமைந்த பாடல் ஸ்வர்ணலதாவுடன் உன்னிகிருஷ்ணன்
தெற்கு தெச காத்து மலேசியா வாசுவின் குரலில் மிகவும் அழகான பாடல்.
இன்றும் என் காரில் அடிக்கடி ஒலிக்கும் பாடல் மாமரக்குயிலே ..
எல்லாமே என் பொண்டாட்டி தான் . வி.சேகரின் இயக்கத்தில் கொத்தமல்லி தோட்டத்துல குண்டுமல்லி வாசம் அழகான கிராமிய மனம் வீசும் பாடல்
மீண்டும் கஸ்தூரி ராஜாவின் வீரம் விளைஞ்ச மண்ணு திரையில் ஒலித்த உத்து உத்து பாக்காதீங்க மாமா மிகவும் அழகான கிராமிய மனம் கமழும் பாடல் ,
ஆசப்பட்டு செஞ்சு வெச்சேன் கொழுக்கட்ட பாடல் குறும்பான கிராமிய பாடல்
விஜயகாந்த் லைலா நடிப்பில் வந்த கள்ளழகர் திரையில் ஒலித்த வாராரு வாராரு கள்ளழகர் வாராரு இன்றும் மதுரை சித்திரை திருவிழா காலத்தில் ஒலிக்கும் பாடல்
பிரபுதேவா நடித்த நினைவிருக்கும் வரையில் கானாவின் உச்சமாக “ஊத்திகினு கடிச்சுக்கவா “ இருந்தாலும் அதே படத்தில் “திருப்பதி ஏழுமலை வெங்கடேசா” மனோ கிருஷ்ணராஜ் பாடிய அழகான கிராமிய மனம் கமழும் பாடல்
அதே படத்தில் உன்னிமேனன் சுஜாதாவை மிகவும் வித்தியாசமாக பாட வைத்து வந்த கிராமிய துள்ளலிசை பாடல் “அன்பே நீ மயிலா குயிலா”
தேவாவிற்கும் சரி அஜித்திற்கும் உச்ச அந்தஸ்தை கொடுத்த படம் வாலி .. அதில் எல்லாமே அமர்க்களமான பாடல்கள்
கார்த்திக் அஜித் மீனா நடிப்பில் வந்த ஆனந்த பூங்காற்றே படத்தில் எனக்கு பிடித்த பாடல் செம்மீனா . அதில் கிராமிய மெட்டில் அமைந்த பாடல் “பாட்டுக்கு பாலைவனம்” அழகான பாடல்
கே.சுபாஷ் இயக்கத்தில் “ஏழையின் சிரிப்பில்” படத்திலும் நல்ல கிராமிய மெட்டில் பல பாடல்கள் அமைந்தன.. கரு கரு கருப்பாயி, யப்பா யப்பா ஐயப்பா எல்லாமே நல்ல பாடல்கள்
முகவரி, சந்தித்தவேளை, குஷி, அப்பு என எல்லாமே ஏறுமுகம் தான்.
சேரனின் வெற்றிக்கொடி கட்டு படத்தில் ஒலித்த “கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு” தில்லேல்லே தில்லேல்லெ என கிராமிய மெட்டில் அசத்தினார் தேவா
மனு நீதி படத்தில் மயிலாடும் பாறை .. அழகான கிராமிய பாடல்
மாயன் திரையில் மாயவனே மாயவனே மல்லிகப்பூ நாயகனே
பாரதிராஜாவுடன் மீண்டும் இணைந்த படம் “கடல் பூக்கள்” அதில் ஆடு மேயுதே .. பாடல் அழகான கிராமிய மெட்டு.
தொடர்ந்து பம்மல் கே சம்மந்தம் என கமல் படத்திலும் கலக்கினார் தேவா
அஜித் நடித்த ரெட் படம் சரியா போகாவிட்டாலும் பாடல் விஷயத்தில் தேவா குறை வைக்கவில்லை . ஒல்லி குச்சி உடம்புக்காரியும் அழகான கிராமிய மெட்டு
பஞ்சதந்திரம், விரும்புகிறேன், பகவதி என்று பாடல்கள் வெற்றி தொடர்ந்தன
சொக்கத்தங்கம் படத்தில் என்ன நெனச்சே பாடல் மிகவும் அழகான கிராமிய மெட்டு
இப்படி பல கிராமிய மனம் கமழும் பாடலகளை தந்தவர் தேனிசைத் தென்றல் தேவா .. எளிமையின் இருப்பிடம் , மெல்லிசை மன்னரை இசை தெய்வமாகவும் மானசீக குருவாக கருதியவர்.
கிடைத்த வாய்ப்புகளில் நல்ல பாடல்களை வழங்கினார் தேவா .. குறிப்பாக எனக்கு அவரின் கிராமிய மெட்டுக்கள் மிகவும் பிடித்தவை.
ஒரு இனிய எளிய மனிதருக்கு ஒரு சமர்ப்பணம்- ராஜேஷ் லாவண்யா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment